பிக் பாஸ் செட்டில் திடீர் பரபரப்பு.. தடைசெய்ய கோரி ஆர்பாட்டம்.. அசம்பாவிதத்தை தடுக்க குவிந்த போலீஸ்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதால், EVP படப்பிடிப்பு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தனியார் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழ்ச்சமூக அமைப்பை அறத்தோடு காத்து வருகின்ற முதன்மை கூறு குடும்ப அமைப்பு, இந்த குடும்ப அமைப்பை சிதைக்கும் விதமாகவும் வளர்கிற இளம் தலைமுறை பிள்ளைகளின் நெஞ்சில் நஞ்சை பாய்ச்சுவது போல் ஆபாசம், வன்முறை, குரோதம், பொய், துரோகம், தனிமனித மோதல்கள், போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை உருவாக்கி வளர்த்து தமிழ் சமூகச் சீரழிவை விஜய் தொகைக்காட்சி ஒளிபரப்பும் "பிக்பாஸ்" நிகழ்ச்சி செய்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: எனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.வேல்முருகனன்.MLA அவர்கள் தலைமையில் எங்கள் கட்சியின் மகளிர் அணியினர் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குந்தம்பாக்கத்தில் இருக்கும் EVP படப்பிடிப்பு வளாகத்தில் அமைந்திருக்கும் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தாயரிக்கும் அரங்குக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.
குவித்த போலீஸ்: இதையடுத்து இன்று செம்பரம்பாக்கத்தை அடுத்து EVP பிலிம் சிட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.வேல்முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தின் போது ஆர்பாட்டக்காரர்கள் EVP பிலிம் சிட்டிக்குள் நுழைந்துவிடாத வகையில் நுழைவாயிலில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு நடத்திற்குள் உரிய அடையாள அட்டை இருப்பவர்களை மட்டுமே போலீசார் உள்ளே அனுமதித்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











