விஜய் ரசிகர்களுக்கு ஒரு 'பஞ்ச்' செய்திங்கண்ணா!
சென்னை: ஜில்லா படத்தில் விஜய் பஞ்ச் வசனமே பேச மாட்டாராமே என்று கவலையில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
தலைவா படம் கற்றுத் தந்த பாடத்தால் விஜய் ஜில்லா படத்தில் பஞ்ச் வசனமே வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று செய்திகள் வந்தன. மேலும் படத்தில் எந்தவித அரசியல் பஞ்ச் வசனமும் இருக்கவே கூடாது என்று தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கன்டிஷனாக சொல்லிவிட்டார் என்று செய்தி வெளியிட்டோம்.
இந்த செய்திகளை எல்லாம் பார்த்த விஜய் ரசிகர்கள் எங்கள் வி.ஜே. அண்ணா பஞ்ச்சே பேச மாட்டாரா என்று ஃபீல் பண்ணினார்கள்.

அறிமுக பாடல்
ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் ஆடும் அறிமுக பாடல் மிக பிரமாண்டாக படமாக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். இந்த பாடல் திருமூர்த்தி அணைக்கட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

பஞ்ச்
அறிமுக பாடலின் முதல் வரியிலேயே செம பஞ்ச் வைத்துள்ளார்கள். சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா எதிர்த்து நின்னவன் தூசுடா என்று அந்த பாடல் துவங்குகிறது.

நெத்தியடி
பஞ்ச் டயலாக் பேசினால் தானே பிரச்சனை என்று பாட்டிலே போட்டுத் தாக்கியுள்ளார்கள். முதல் வரி மட்டுமின்றி பாடல் முழுவதும் விஜய் ரசிகர்களை குஷிபடுத்தும் வகையில் பஞ்ச் பஞ்சாக வைத்துள்ளார்களாம்.

ரசிகர்கள்
இந்த அறிமுக பாடலை பார்த்ததுமே விஜய் ரசிகர்களுக்கு படத்தில் பஞ்ச் வசனம் இல்லாத கவலை தீர்ந்துவிடுமாம். பொங்கல் வரைக்கும் காத்திருங்கண்ணா படத்தை பார்க்க.


Click it and Unblock the Notifications











