செல்பி புள்ள பாடலில் சிறப்புத் தோற்றத்தில் ஏஆர் முருகதாஸ்!
எதிர்மறைச் செய்திகள் குறைந்து நேர்மறைச் செய்திகள் அதிகமாக வெளிவர ஆரம்பித்துள்ளன கத்தி படம் குறித்து.
இந்தப் படத்தில் விஜய் பாடியுள்ள செல்பி புள்ள பாடல், தமிழ் சினிமாவில் இன்று அதிகம் பேசப்படும் பாடலாகிவிட்டது.

பிரமாண்டமாய்
இப்பாடலை மிகவும் சிறப்பாக படமாக்க வேண்டும் என்று விரும்பிய படக்குழு, மும்பை பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இப்பாடலில் விஜய்யும், சமந்தாவும் 100 நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.

முருகதாஸ் - அனிருத்
இந்தப் பாடலில் ஏ.ஆர்.முருகதாஸ்-அனிருத் இருவரும் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருக்கிறார்களாம்.

இரண்டாவது முறை
ஏற்கனவே துப்பாக்கி படத்தில் விஜய் பாடிய ‘குகூள்...' பாடலில் முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியிருந்தார்.

அனிருத்
அனிருத்தைப் பொருத்தவரை, தான் பணியாற்றும் அத்தனைப் படங்களிலும் ஏதாவது ஒரு காட்சியில் தோன்றுவது அல்லது ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











