ரூ.20 கோடிக்கு 'புக்' ஆன ஏ.ஆர். முருகதாஸ்!
சென்னை: இதுவரை சின்ன லெவலில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மிகப் பெரிய சம்பளத்திற்கு ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
சாதாரண இயக்குநராக வாழ்க்கையைத் தொடங்கி விஜயகாந்த்தை வைத்து ரமணா என்ற மிகப் பெரிய ஹிட்டைக் கொடுத்து அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் முருகதாஸ்.
முதல் படமான தீனாவிலேயே சற்றே வியப்பலைகளை ஏற்படுத்தியவர்தான் முருகதாஸ் என்றாலும் அவரது கஜினிதான் மிகப் பெரிய இயக்குநராக அவரை உயர்த்தி உட்கார வைத்தது.

அடுத்தடுத்து சூப்பர் ஹிட்
தொடர்ந்து சூப்பர் ஹிட்களைக் கொடுத்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவராக முக்கியமானவராக முருகதாஸ் விளங்குகிறார்.

துப்பாக்கியில் 11 கோடி
கடைசியாக முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இப்படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ.11 கோடி. இதுவே கோடம்பாக்கத்து இயக்குநர்களை பெருமூச்சு விட வைத்தது.

மீண்டும் ஒரு விஜய் படம்
அடுத்தும் ஒரு விஜய் படத்தை இயக்கப் போகிறார் முருகதாஸ். இந்தப் படம் மிகப் பிரமாண்டமானதாக, அதிரடியாக உருவாகவுள்ளதாம்.

ஆனால்.. தயாரிப்பு தாணு கிடையாது
இந்தப் படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் தற்போது தாணு இல்லையாம். மாறாக லண்டன் கருணா தயாரிக்கிறாராம். இவர் ஏற்கனவே எந்திரன் படத்தை தயாரிப்பதாக ஒப்புக் கொண்டு பின்னர் ஓடிப் போனவர்.

20 கோடி சம்பளம்
இந்தப் படத்திற்குத்தான் முருகதாஸுக்குப் பெரிய சம்பளம் பேசியுள்ளனர். அதாவது ரூ. 20 கோடி சம்பளமாம். இவருக்கே இவ்வளவு பெரிய சம்பளம் என்றால் படத் தயாரிப்பு செலவு எங்கே போகும் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











