பிளேட், டீ கிளாஸ் கழுவிருக்கேன்.. 100 பேரு போட்ட பிச்சைதான் காரணம்.. ஏ.ஆர்.முருகதாஸ் எமோஷனல்

சென்னை: 100 பேரு போட்ட பிச்சையால்தான் நான் இப்போது மேடையில் நிற்கிறேன் என ஏ.ஆர்.முருகதாஸ் 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் அவரது இயக்கத்துக்கென்று ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவரது படங்களில் நடிக்க ஹீரோக்களும் ரொம்பவே ஆசைப்படுவார்கள்.

தீனா மூலம் அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ்

தீனா மூலம் அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ்

கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம்தான் அஜித்தை ஆக்‌ஷன் படங்களில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இதுவரை அஜித்தின் படங்களில் வந்த அவரது அறிமுக காட்சிகளில் தீனா படத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு. அதேபோல் இப்படத்தில் அஜித்தின் கெட்டப்பும் அவரது ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படுகிறது.

முன்னணி இயக்குநரான முருகதாஸ்

முன்னணி இயக்குநரான முருகதாஸ்

முதல் படம் மெகா ஹிட்டான பிறகு விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். முதல் படத்தில் கமர்ஷியலாக களமிறங்கிய முருகதாஸ் இரண்டாவது படத்தில் சமூக அக்கறையுடன் களமிறங்கினார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு பேராசியரை வைத்து கோலிவுட்டை கலக்கினார் முருகதாஸ். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக அதுவரை ஆக்‌ஷன் ஹீரோவாகவே வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் பக்குவமாக அடக்கி வாசித்திருப்பார்.

புரட்டிப்போட்ட கஜினி

புரட்டிப்போட்ட கஜினி

முதல் இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் முன்னணி இயக்குநராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து சூர்யாவை வைத்து அவர் இயக்கிய கஜினி படமும் மெகா ஹிட்டாக அந்தப் படம் ஹிந்தியில் ரீமேக்கானது. அமீர்கான் நடித்திருந்த கஜினி ஹிந்தி ரீமேக்கையும் முருகதாஸே இயக்கினார். பாலிவுட்டிலும் கஜினி ஹிட்டடிக்க இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து அவர் தமிழில் இயக்கிய ஏழாம் அறிவு படமும் ஹிட்டானது.

விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த துப்பாக்கி

விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த துப்பாக்கி

விஜய் தொடர் தோல்விகளில் துவண்டிருந்தபோது அவருக்கு பக்கா கமர்ஷியல் ஹிட் கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி. அதுவரை விஜய்யை யாரும் அவ்வளவு ஸ்டைலிஷாக பார்த்ததில்லை என்ற பெயரை துப்பாக்கி பெற்றுக்கொடுத்தது. அதேபோல் விஜய்யுடன் இரண்டாவது முறை இணைந்த கத்தி படமும் மெகா ஹிட்டாக; மூன்றாவதாக இணைந்த சர்கார் அடிவாங்கியது. தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதில் ரஜினியின் தர்பாரும் அடக்கம்.

1ஆகஸ்ட் 16 - 1947 ஆடியோ லாஞ்ச்

1ஆகஸ்ட் 16 - 1947 ஆடியோ லாஞ்ச்

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகஸ்ட் 16 - 1947 என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தை அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.எஸ்.பொன்குமார் இயக்கியிருக்கிறார். கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 எமோஷனல் ஆன முருகதாஸ்

எமோஷனல் ஆன முருகதாஸ்

விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், "இந்த உலகத்தில் செல்ஃப் மெட் என்பதே மிகப்பெரிய பொய். தன்னிச்சையாக யாராலும் இங்கு வந்துவிட முடியாது என்பதுதான் உண்மை. 100 பேர் உதவி செய்தால்தான் ஒருவரால் வளர முடியும். நான் இப்போது இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் 100 பேர் எனக்கு கொடுத்த கை, 100 பேர் போட்ட பிச்சைதான் காரணம்.

நான் பிளேட் கழுவிருக்கேன்

நான் பிளேட் கழுவிருக்கேன்

நான் கேரியரில் சாப்பாடு வாங்கிக்கொண்டு போகாத கடைகளே இல்லை. நான் பிளேட்டுகள் கழுவியிருக்கிறேன். பலர் குடித்த டீ கிளாஸ்களை கழுவியிருக்கிறேன். சர்க்கரை இல்லாத 10 டீ, சர்க்கரை உள்ள 10 டீ என சுமந்து அதை கொடுத்து அதன் பிறகு அவர்கள் சொல்லும் டயலாக்குகளை எழுதியிருக்கிறேன். அப்படி செய்தால்தான் வரமுடியும். இதை நான் சந்தோஷமாகவே சொல்கிறேன்" என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X