ரஜினி நடிப்பில் அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2 ம் பாகத்தை எடுக்க திட்டமிட்ட முருகதாஸ்...கை கூடலையே
சென்னை: ரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் என்ன என்பதை இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம், தர்பார். இதில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு படம் திரைக்கு வர இருக்கிறது.

போலீஸ் கதை
படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, இது மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். படத்தில் அரசியல் இல்லை. ரஜினி தாடியுடன் நடித்துள்ளார். அதற்கு காரணம் சொல்லப்பட்டு இருக்கிறது.

சந்திரமுகி 2
ரஜினிகாந்த் ஆச்சரியமான மனிதர். மனதால் இளைஞர். அவரை வைத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆசைப்பட்டேன். அதற்காக ஒரு கதையை தயார் செய்து அவரிடம் சொன்னேன்.

ஆர்கிடெக்ட்
ரஜினிகாந்துக்கு பிடித்திருந்தது. சில தடைகள் இருந்ததால், அந்தப் படம் தொடங்கப்படவில்லை. தர்பாரில் நயன்தாரா ஆர்கிடெக்ட்டாக வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்துள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர்
இந்தப் படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கப் போவதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. அடுத்தப் படம் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. தர்பார் ரிலீஸுக்கு பிறகுதான் அதுபற்றி யோசிக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











