விஜய்யின் உண்மையான குணத்தை சர்காரில் பார்பீங்க... முருகதாஸ் சொன்ன சீக்ரெட்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை: நடிகர் விஜய்யின் உண்மையான குணம் தான் சர்கார் படத்தில் அவர் செய்திருக்கும் கதாபாத்திரிம் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

A.R.Murugadoss on Vijay character

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த நடுவீரப்பட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தில் விஜய் நடித்துள்ள கதாபாத்திரத்தின் குணச்சித்திரம் குறித்து வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

சர்கார் படத்தில் உண்மையான விஜய்யை நீங்கள் பார்ப்பீர்கள். எங்கு பிரச்சினை நடந்தாலும் அவர் ஓடோடிச் சென்றுவிடுவார். அங்கு பாதுகாப்பு இருக்கா இல்லையா என்றெல்லாம் அவர் யோகிக்க மாட்டார்.

அதுபோல தான் தூத்துக்குடிக்கு அவர் சென்றதும். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது. இதையடுத்து நாங்கள் அனைவரும் சென்னைக்கு கிளம்பிவிட்டோம்.

ஆனால் அவர் தானாகவே காரை ஓட்டிச் சென்று தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் பார்த்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார். இந்த குணத்தை தான் சர்காரில் நீங்கள் பார்ப்பீர்கள்", இவ்வாறு இயக்கனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X