என்னா ஸ்பீடு.. என்னா ஸ்பீடு.. நாலே நாளில் தர்பார் டப்பிங்கை முடித்த ரஜினி.. வியந்து போன முருகதாஸ்!
தர்பார் படத்திற்கான ரஜினியின் டப்பிங் பணி முடிவடைந்துவிட்டதாக இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ரஜினியின் டப்பிங் பேசும் திறமையைப் பார்த்து வியந்து போயிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில், டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் ரிலீசாக இருக்கிறது. இப்படம் முருகதாஸ் ஸ்டைலில் செம மாஸ் கமர்சியலாக உருவாகி வருகிறது.

ரஜினியின் தர்பார்
படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் ஆகும். படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

தர்பார் டப்பிங்
தர்பார் படத்தின் டப்பிங் பணியை கடந்த 14ம் தேதி ரஜினி துவங்கினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. நான்கு நாட்களில் மொத்த படத்திற்கான டப்பிங்கையும் ரஜினி பேசி முடித்துவிட்டார்.
முருதாஸ் டிவீட்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், " எனது வாழ்நாளில் மிகச்சிறந்த டப்பிங் அமர்வு இது. தர்பார் படத்திற்கான ரஜினியின் டப்பிங் முடிந்துவிட்டது", என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது கேண்டிட்டாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.

விரைவில் டிரெய்லர்
முருகதாஸ் வெளியிட்ட இந்த பதிவால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிசம்பர் மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. ரஜினி பிறந்தநாளன்று தர்பார் டிரெய்லரை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











