அதெல்லாம் முடியாது.. எனக்கு வேலை இருக்கு.. சிவகார்த்திகேயனுக்கு ஆர்டர் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

வசூல் வேட்டை: இந்த பொங்கல் ரேஸ் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமானதாகவே கருதப்பட்டது. ஏனெனில் அயலான் திரைப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே இதில் தனுஷை சிவா வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.
எதிர்பார்ப்பில் அமரன்: அயலான் படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர், டீசர், போஸ்டர்கள் என அப்டேட்டுகளாக குவிந்து ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி: இதற்கிடையே அமரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். தற்போது அந்தப் படத்துடைய ஷூட்டிங்கின் இரண்டாம் ஷெட்யூல் மும்முரமாக நடந்துவருகிறது. முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார். எனவே இந்தப் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிர முனைப்போடு இருக்கிறார் ARM.
கண்டிஷன் போட்ட முருகதாஸ்?: இந்நிலையில் இந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதன்படி அமரன் படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்படவிருக்கிறதாம். அதனால் முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் 10லிருந்து 20 நாட்கள் கேப் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற நினைப்பில் இருந்தாராம். ஆனால் முருகதாஸோ அதற்கு ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டாராம். ஏனெனில் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை வைத்து படம் இயக்கவிருக்கிறார்.
அந்தப் படத்தை ஜூன் மாதத்தில் தொடங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் விரைவில் இந்தப் படத்தை முடிக்க பம்பரமாய் வேலை செய்கிறாராம் முருகதாஸ். அதனால்தான் சத்தமே இல்லாமல் படத்தின் ஷூட்டிங் இரண்டாவது ஷெட்யூல்வரை சென்றிருக்கிறதாம். அநேகமாக இன்னும் சில வாரங்களிலேயே படத்தின் ஷூட்டிங்கை முருகதாஸ் முடிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











