நான் பண்ணலாம்னு இருந்தேனே.. ராஜமௌலியால் நொந்து நூடுல்ஸ் ஆன ஏ.ஆர் முருகதாஸ்.. என்ன நடந்தது?
சென்னை: இயக்குனர் ராஜமௌலி செய்த ஒரு காரியத்தால் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் கடும் அப்செட்டில் இருக்கிறார்.
தொட்டதெல்லாம் வெற்றி என்ற மோடில் இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இவர் எடுத்த கடந்த 3 படங்கள் சர்வதேச அளவில் மெகா ஹிட் ஆகி உள்ளது.
பாகுபலி 1 படம் இவரை தேசிய அளவில் வைரலாக்கியது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட பாகுபலி பார்ட் 2 படம் இவரை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றது.

ஆர்ஆர்ஆர்
அதன்பின் எடுக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படம் இவரை உலக அளவில் கவனிக்க வைக்கும் இயக்குனர் ஆக்கியது. இதற்காக அவர் ப்ரோமோஷனுக்கு மட்டும் 80 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஆக்ஸர் பெற அவர் தீவிரமாக முயன்றார். கடைசியில் நாட்டு நாட்டு பாடல் இந்த படத்தில் ஆக்ஸர் பெற்றது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார் ராஜமௌலி என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இயக்குனர் ராஜமௌலி செய்த ஒரு காரியத்தால் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் கடும் அப்செட்டில் இருக்கிறார்.

பிளான் என்ன?
அதன்படி ராஜமௌலி தற்போது விலங்குகளை வைத்து படம் ஒன்றை எடுக்க உள்ளார். ராம்சரண் நடிப்பில் இந்த படம் தயாராக உள்ளது. முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து இந்த படம் எடுக்கப்பட உள்ளது. காட்டில் நடப்பதாக இந்த கதை காட்டப்பட உள்ளது. இதற்காக அமெரிக்கா, சீனாவில் ஷூட்டிங் எடுக்க ராஜமௌலி முடிவு செய்துள்ளார். இந்த நிலையில்தான் அந்த ஷூட்டிங் ரியல் விலங்குகளை பயன்படுத்தாமல் அனிமேட்ரானிக்ஸ் முறையில் மெஷின் விலங்குகளை உருவாக்கி பயன்படுத்த போகிறார். அதில் அனிமேஷன் கலந்து பார்க்க தத்ரூபமாக படத்தை எடுக்க உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முருகதாஸ்
ஆனால் முருகதாஸ் இதே தொழில்நுட்பத்தை வைத்து படம் ஒன்றை எடுக்கும் திட்டத்தில் இருந்துள்ளாராம். கொரில்லா படம் ஒன்றை எடுக்கும் திட்டத்தில் ஏ. ஆர் முருகதாஸ் கதையை எழுதி தயாராக இருந்துள்ளார். அதற்கும் பெரிய பட்ஜெட் போடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த படத்திற்கு ப்ரொடியூசர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கதையை வைத்துக்கொண்டு முருகதாஸ் இங்கும் அங்கும் அலைந்து இருக்கிறார். ஆனாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரின் கடைசி 3 படங்கள் பெரிய அளவில் பிளாப் ஆனதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஸ்பைடர் தொடங்கி தர்பார், சர்க்கார் வரை எல்லா படங்களும் பிளாப் கொடுத்ததுதான் அவருக்கு சிக்கலாக மாறி உள்ளது.

பிளாப்
இந்த நிலையில்தான் அதே தொழில்நுட்பத்தை வைத்து தற்போது ராஜமௌலி படம் எடுக்க இருக்கிறார். இதனால் முருகதாஸ் அப்செட் ஆகி உள்ளாராம். நாம் தானே இந்த தொழில்நுட்பத்தை வைத்து படம் எடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் அதற்குள் ராஜமௌலி எடுக்கிறாரே. இனி நாம் எடுத்தால் நம்மை காப்பி என்று சொல்வார்களே. ராஜமௌலியை பார்த்து காப்பி அடித்தோம் என்று சொல்வார்களே? என்ன செய்வது என்று புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











