ஷாருக்கான் இடத்தில் சிவகார்த்திகேயன்.. ஓஹோ மதராஸி கதை அப்படி போனதா?.. வேற லெவல் எஸ்கே!
சென்னை: கூலி திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றதை அடுத்து ரசிகர்களின் கவனமும், எதிர்பார்ப்பும் அடுத்ததாக மதராஸி திரைப்படத்தின் மீது விழுந்திருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அமரன் கொடுத்த ஹிட் வைபை எஸ்கே இந்தப் படத்திலும் தக்க வைத்துக்கொள்வார் என்பது அவரது ரசிகர்களுடைய நம்பிக்கை.
கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்த படமாக ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இருந்தது. இந்த மாதம் கண்டிப்பாக கோலிவுட் தரமான சம்பவத்தை சந்திக்கப்போகிறது என்று பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் 400 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தாலும்; எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்பதுதான் உண்மை.
அடுத்த எதிர்பார்ப்பு: தங்கள் எதிர்பார்ப்பை கூலி இப்படி குழியில் தள்ளும் என நினைக்கவில்லை ரசிகர்கள். அடுத்ததாக அவர்களது கவனம் எல்லாம் சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மதராஸி திரைப்படத்தின் மீது இருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். துப்பாக்கி வில்லன் வித்யூத் ஜம்வாலும் நடித்திருக்கிறார்.

முதன்முறை: ஏ.ஆர்.முருகதாஸ் ஒருகாலத்தில் இந்திய அளவில் ஹிட்டுகள் கொடுத்த இயக்குநர். ஆனால் அவர் கடந்த சில வருடங்களாகவே தடுமாறிக்கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக இயக்கிய சிக்கந்தர், தர்பார், சர்கார், ஸ்பைடர் ஆகிய நான்கு படங்களுமே படுதோல்வி. அவரது இயக்கத்தில் ஒரு சீனிலாவது நடித்துவிடமாட்டோமா என்று ஏங்கிய நடிகர்கள் எல்லாம் இன்று முருகதாஸை பரிதாபமாக பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான் எஸ்கேவுடன் முதன்முறையாக இணைந்திருக்கிறார் சிவா.
அடுத்த மாதம் ரிலீஸ்: படத்தின் க்ளிம்ப்ஸ், முதல் சிங்கிள் எல்லாம் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கின்றன. படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. எஸ்கேவை பொறுத்தவரை கடைசியாக அவர் நடித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர். எனவே மதராஸியும் ஹிட்டாகி அவருக்கு இதிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் நோக்கமாக இருக்கிறது. இதனை முருகதாஸ் நிறைவேற்றி; தானும் பல வருடங்களுக்கு பிறகு ஒரு வெற்றியை பெற வேண்டும் என்ற தீவிரத்தில் உழைத்திருப்பதாக தெரிகிறது.
முருகதாஸ் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போது பேசிய அவர், "மதராஸி படத்தின் கதையை எட்டு வாருடங்களுக்கு முன்பு முதலில் ஷாருக்கானுக்குதான் கூறினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. நடிப்பதற்கும் ஓகே சொல்லியிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து மெசேஜ் செய்தேன். ஆனால் அவர் பதில் சொல்வதில் கொஞ்சம் தாமதம் இருந்தது. எனவே அவரை அதற்கு பிறகு தொடர்புகொள்ளவில்லை. சிவகார்த்திகேயனிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்து உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











