ஏ.ஆர்.முருகதாஸின் மகனா இவரு?.. ஹீரோவாகவே நடிக்கலாம்.. எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க
சென்னை: இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு; கடந்த வருடம் வெளியான மதராஸி திரைப்படம் ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்தது. அடுத்ததாக என்ன படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கும் சூழலில்; முருகதாஸின் மகனின் புகைப்படங்கள் வெளியாகி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்; தீனா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த ஹிட்டுக்கு பிறகு விஜயகாந்த்தை வைத்து இயக்கிய ரமணா, சூர்யாவை வைத்து இயக்கிய கஜினி, ஏழாம் அறிவு, விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. இதன் காரணமாக தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.
இந்திய அளவில் ஃபேமஸ்: இதற்கிடையே தமிழில் அவர் எடுத்த கஜினி பெற்ற வெற்றி; இந்தியா முழுவதும் பிரதிபலித்தது. இதன் காரணமாக அவருக்கு ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அமீர் கானை ஹீரோவாக வைத்து கஜினியை ஹிந்தியில் ரீமேக் செய்தார். அதுவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆக; இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராக மாறிவிட்டார். அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் ஆசைப்பட்டார்கள்.

தொடர்ந்து தோல்வி: ஆனால் முருகதாஸின் கரியர் திடீரென சரிந்தது. விஜய்யை வைத்து இயக்கிய சர்கார், மகேஷ் பாபுவை வைத்து இயக்கிய ஸ்பைடர் படங்கள் பெற்ற தோல்வி அவரது வாழ்க்கையில் மறக்க முடியாதது. எப்படியாவது அதிலிருந்து மீண்டு வந்துவிட வேண்டும் என்று முயற்சித்தவருக்கு; அதற்கான பலன் கடந்த சில வருடங்களாகவே கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கினார்.
மதராஸி ஓகே: அந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. மற்ற பெரிய ஹீரோக்கள் மற்றும் பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு மதராஸி எவ்வளவோ பரவாயில்லை என்பது ரசிகர்களின் கருத்து. முக்கியமாக கடந்த சில வருடங்களாக முருகதாஸ் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருந்த தோல்விக்கு; இந்த சுமார் ரகம் பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது. அடுத்ததாக அவர் என்ன படம் இயக்கப்போகிறார் என தெரியவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் முருகதாஸின் மகன் ஆதித்யாவின் புகைப்படம் ட்ரெண்டாகியிருக்கிறது.
உதவி இயக்குநர் ஆதித்யா: தனது தந்தை, தாய், சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை புத்தாண்டையொட்டி வெளியிட்டிருக்கிறார் அவர். அதனைப் பார்த்த ரசிகர்களோ, அட இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காரே; தந்தை இயக்கத்திலேயே ஹீரோவாக நடித்துவிடலாமே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். ஆனால் அவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டு விரைவில் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











