‘ஓலக் குடிசையில கனவு கண்டாளே..’ அனிதாவுக்கு பாடல் மூலம் இசையமைப்பாளர் ஜஃபி அஞ்சலி!
அனிதாவுக்கு பாடல் மூலம் இசையமைப்பாளர் ஜஃபி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை: அனிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஜஃபி இசையில் ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு இதே நாளில் தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் மாணவி அனிதாவின் மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாணவி அனிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனிதாவின் சொந்த ஊர் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்ச்சி, அனிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் அனிதா நினைவு அறக்கட்டளை துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் ஜஃபி, அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'மகராசி' என்ற பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
'ஓலக் குடிசையில கனவு கண்டாளே..' எனத் தொடங்கும் அந்தப் பாடல் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications