twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    20 ஆண்டுகள் காத்திருந்த டைரக்டர்... நீண்ட போராட்டத்திற்கு பின் மீண்டும் இணைந்த இசைப்புயல்

    |

    சென்னை : இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ஒவ்வொரு டைரக்டரின் கனவு. கடந்த 30 ஆண்டுகளாக கே.பாலசந்தர், பாரதிராஜா, மணி ரத்தம் உள்ளிட்ட பல டைரக்டர்களுடன் ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றி உள்ளார்.

    A.R. Rahman dream combo with acclaimed director happening after 20 years wait

    தமிழ் சினிமாவில் முக்கியமான டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் பார்த்திபன். இவர் 2001 ல் ஏலேலோ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் 4 பாடல்களுக்கு இசை அமைத்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் பாதிலேயே கைவிடப்பட்டது.

    அதற்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்ற பார்த்திபன் பல முறை முயற்சித்தார். இருந்தும் அது முடியாமல் போனது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பார்த்திபன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.பார்த்திபனின் நீண்ட நாள் கனவான, ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுப்பது, தற்போது நிறைவேற உள்ளது. இரவின் நிழல் என்ற பெயரில் எடுக்கப்பட உள்ள இந்த படத்தின் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    A.R. Rahman dream combo with acclaimed director happening after 20 years wait

    இந்த படத்தில் பெரிய நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பார்த்திபன் திட்டமிட்டுள்ளார். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய பொருட் செலவில் பார்த்திபன் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.

    கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு படங்களை போல் இரவின் நிழல் படத்தையும் திரைக்கு பின் இருந்தே பார்த்திபன் செயல்பட உள்ளார். விருது வெல்லும் நோக்கத்துடன் இந்த படத்தை இவர் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய தகவலை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    after twenty years A.R. Rahman is said to have signed on to score the music for Parthiban's ambitious single shot movie 'Iravin Nizhal'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X