A.R.Rahman - பக்கத்துல படுக்கமாட்டேன் என சொன்ன மனைவி.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த டாப் சீக்ரெட்

சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) தனது மனைவி தன்னிடம் கூறிய விஷயம் குறித்த டாப் சீக்ரெட்டை பகிர்ந்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் இசைப்புயல் என்று அழைக்கப்படுபவர். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அசத்தினார். 90களில் உலகமயமாக்கல் இந்தியாவுக்குள் நுழைந்தபோது திரைத்துறைக்குள் நுழைந்த ஏ.ஆர்.ரஹ்மான் அந்த காலத்துக்கேற்ப இசையை ரசிகர்களுக்கு கொடுத்தார். இதன் காரணமாக அவரது இசையை பலரும் புதிதாக உணர்ந்தார்கள்.

A.R. Rahman has said that his wife told him that she would not sleep next to him if he had long hair

வெற்றிக்கொடி: அதுவரை தமிழ் சினிமா இளையராஜாவின் கோட்டை என்ற பிம்பம் இருந்தது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் வந்த பிறகு அந்த கோட்டையை பகிர்ந்துகொண்டார். இளம் இயக்குநர்கள் மட்டுமே ரஹ்மானோடு பணியாற்றுகிறார்கள் எனவே ஒன்றிரண்டு படங்கள் தோற்றுப்போனால் அவர் காணாமல் போய்விடுவார் என்று ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே அதிரிபுதிரி ஹிட்டடித்தன. முக்கியமாக கே.பாலசந்தர், பாரதிராஜா போன்ற மூத்த இயக்குநர்களும் ரஹ்மானின் பஞ்சகன் ஸ்டூடியோவுக்கு படை எடுத்தனர்.

கிராமத்து மண் மணம்: ரஹ்மான் எலக்ட்ரானிக் கருவிகளை வைத்துக்கொண்டு வித்தை காண்பிக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே, கருத்தம்மா ஆகிய இரண்டு படங்களின் பாடல்களுமே அந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கின. இதனையடுத்து தவிர்க்கவே முடியாத இசையமைப்பாளராக மாறினார்.

ஆஸ்கர் விருதுகள்: தமிழில் வென்று காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்ததாக பாலிவுட் சென்று அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். அதனையடுத்து ஹாலிவுட் சென்ற அவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப் விருது, கிராமி விருதுகளை அள்ளினார். இதன் காரணமாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.

A.R. Rahman has said that his wife told him that she would not sleep next to him if he had long hair

ரஹ்மானின் அடையாளம்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இப்போது வேண்டுமானால் ஆஸ்கர் விருதும் அதுதவிர்த்து மற்ற விருதுகளும் அடையாளமாக இருக்கலாம். ஆனால் அவரது ஆரம்பகால அடையாளம் அவர் வளர்த்த நீண்ட முடிதான். அந்த முடியோடு வந்தே மாதரம் ஆல்பத்தில் தோன்றிய ரஹ்மானை பார்த்து இளைஞர்கள் பித்து பிடித்து அடிமையாகினர். ஒருகட்டத்துக்கு மேல் அவர் தனது நீளமான முடியை எடுத்துவிட்டார்.

என்ன காரணம்?: இந்நிலையில் அதற்கான காரணம் குறித்து அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவரிடம் எதற்காக நீண்ட முடியை எடுத்துவீட்டீர்கள் என தொகுப்பாளர் கேட்க, "அது ஒன்னுமில்லை. நீண்ட முடி வெச்சிருந்தா என் பக்கத்துல படுக்கமாட்டேனு பொண்டாட்டி சொல்லிட்டார்.நாங்கதான் அப்படி வெச்சிருக்கோம். நீ ஏன் இப்படி வெச்சிருக்க எனவும் கேட்டுவிட்டார். அதனால்தான் எடுத்துவிட்டேன்" என கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X