சர்ச்சையில் ஏஆர் ரஹ்மான்.. விபூதியை அழிங்க ..பிறைசூடன் சொன்ன அந்த விஷயம்.. பழசை கிளறும் நெட்டிசன்ஸ்!

சென்னை: இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் அளித்த பேட்டியில், சினிமாத்துறை, சமூகம் சார்பானதாக மாறிவிட்டதால், தனக்கு 8 ஆண்டுகளாக படவாய்ப்புகள் குறைந்து விட்டது என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர். ரஹ்மான், இசை என்பது கலாச்சாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் இப்பொழுது புரிந்து கொண்டேன். யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் கொடுத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த பின்பும் இந்த பிரச்சனை குறித்து பழைய விஷயத்தை இணையவாசிகள் கிளப்பி வருகின்றனர். அதாவது, மறைந்த பாடலாசிரியர் பிறைசூடன் பேட்டி ஒன்றில் ரஹ்மானின் வீட்டில் நடந்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், அதில், நானும் ரஹ்மானும் பத்து ஆண்டுகள் விளம்பரத்தில் ஒன்றாக வேலை செய்தோம், அவர் வீட்டில் தான் இசை அமைக்கப்படும்.
பல விளம்பரத்தில் இசையமைத்த பிறகு, அவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது. ஆனால், அவர் சினிமாவிற்கு வருவதற்கு தயங்கினார். அதன்பிறகு நானும், அவரின் அம்மாவும் எடுத்து சொன்ன பிறகு முதல் படத்தில் இசையமைத்தார்.

A R Rahman Piraisoodan
Photo Credit:

விபூதியை அழிங்க: முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது, முதல் படத்தின் வெற்றிக்கு பின் இரண்டாவது படத்தில் கமிட்டானார். அந்த படத்திற்கு நான் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் காமினேஷனை பிரிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் என என்னிடம் கேட்டார். நானும், உங்களுக்கு ஒகேவா என்று கேட்டேன். அவரும், அது தான் சரி எனப்படுகிறது என்றார். உடனே நானும், சந்தோஷமாக அவருடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று சொன்னோன். அதன் பின், பல ஆண்டுகள் கழித்து, வீட்டுக்கு அழைத்து இருந்தார். நானும் அவரை பார்க்க காலையிலேயே சென்றுவிட்டேன். அப்போது, ரஹ்மானின் தாயார் விபூதி மற்றும் குங்குமத்துடன் வீட்டிற்குள் வர வேண்டாம் என்று சொன்னார்கள். அதில், எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் நான் அதை அப்படியே கடந்து விட்டேன் என்று சொல்லி இருந்தார். இந்த விஷயம் அப்போதே பேசு பொருளான நிலையில், இப்போது ஏஆர் ரஹ்மான் சர்ச்சையில் சிக்கி இருக்கும் போது, பாடலாசிரியர் பிறைசூடன் சொன்னதை தோண்டி எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X