ஏ.ஆர்.ரஹ்மான் எனது அப்பா மாதிரி.. இப்படி பேசாதீங்க.. எமோஷனலான மோகினி டே.. வதந்திக்கு முற்றுப்புள்ளி
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்கள். யாருமே எதிர்பார்க்காத விவாகரத்தாக அவர்களது விவாகரத்து இருக்கிறது. இதன் காரணமாக பலரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ரஹ்மானிடம் பேஸிஸ்ட்டாக இருக்கும் மோகினி டேயும் ரஹ்மான் விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்தில் தனது விவாகரத்தை அறிவித்தார். இதனால் பலரும் கண், காது, மூக்கு வைத்து பேச ஆரம்பித்தார்கள்.
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா துறையில் மிஸ்டர் க்ளீன் என்று பெயர் எடுத்தவர். எந்த சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்காமல் தான் உண்டு, தனது இசையும், குடும்பமும் உண்டு என்று இருப்பவர். இதன் காரணமாகவே அவர் மீது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் மரியாதை வைத்திருக்கிறது. இப்போதும் படு பிஸியாக இசையமைத்துவரும் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் காதலிக்க நேரமில்லை படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.

விவாகரத்து: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தானும், ரஹ்மானும் பிரிவதாக அறிவித்தார். அவர் அவ்வாறு அறிவித்த சிறிது நேரத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மானும் தனது எக்ஸ் தளத்தில் எமோஷனலாக ட்வீட் போட்டு விவாகரத்தை உறுதி செய்தார். இதன் காரணமாக ஒட்டுமொத்த இசை ரசிகர்களும் ஷாக்கில் உறைந்தனர்.
மோகினி டே விவாகரத்து: இவர்களின் விவாகரத்து புயல் ஓய்வதற்குள் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேஸிஸ்ட்டாக ஒர்க் செய்யும் மோகினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். எதற்கெடுத்தாலும் சர்ச்சையையும், கிசுகிசுவையும் தேடும் ஒருதரப்பினர்; மோகினி டேயையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்து பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அதில் எல்லாம் துளிக்கூட உண்மை இல்லை என்று பெரும்பாலானோர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்தார்கள்.
எச்சரித்த ஏ.ஆர்.ரஹ்மான்: இருந்தாலும் அவர்கள் அவ்வாறு பேசுவதை நிறுத்தவில்லை. இதன் காரணமாக பொறுத்து பொறுத்து பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தனது விவாகரத்து குறித்தும், தன்னைப் பற்றியும் அவதூறாக பேசிய வீடியோக்கள், எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகிய அனைத்தையும் 24 மணி நேரத்துக்குள் சோஷியல் மீடியா, யூடியூப், இணைய பத்திரிகைகள் உள்ளிட்டவைகளிலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்திருந்தார்.
சாய்ரா பானுவும் சப்போர்ட்: இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ஒரு ஆடியோ வெளியிட்டார். அந்த ஆடியோவில், "எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லை. அதனால் ரஹ்மானின் பணிகள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே நாங்கள் பிரிய முடிவு செய்தோம். ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் மாதிரி ஒரு நல்லவரை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. எதையும் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை" என்று கூறி பதிலடி கொடுத்திருந்தார்.
மோகினி டே வீடியோ: இந்நிலையில் இவ்விவகாரத்தில் அமைதியாக இருந்த மோகினி டே தற்போது வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "எனக்கு ரோல் மாடல்களாக பலர் இருக்கிறார்கள். எனது வளர்ச்சியில் அவர்களின் பங்கு முக்கியமானது. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானும் எனக்கு ஒரு ரோல் மாடல். அவர் எனக்கு தந்தை மாதிரி. அவருக்கு என் வயதில் ஒரு மகளும் இருக்கிறார். அவரிடம் நான் கிட்டத்தட்ட 8 வருடங்களாக பேஸிஸ்ட்டாக பணியாற்றியிருக்கிறேன். எங்கள் இரண்டு பேருக்குள்ளும் பரஸ்பர மரியாதை இருக்கிறது. விவாகரத்து என்பது வலி தரக்கூடிய விஷயம். எனவே தனியுரிமையை மதிக்க வேண்டும். என்னையும் அவரையும் இணைத்து வந்த வதந்திகள் உண்மையில்லை. கனிவாக நடந்துகொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அவர் அந்த வீடியோவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என்னையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்து பேசுவதை நம்பவே முடியவில்லை. மக்களின் மனநிலையை பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி" என்று நீண்ட பதிவையும் வெளியிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











