29 வருட திருமண வாழ்க்கை.. பிரிந்து வாழ்வது ஏன்?.. ஏ.ஆர். ரகுமான் மனம் திறந்த பேட்டி!
சென்னை: இந்தியாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகாடமி விருது, கோல்டன் குளோபல் விருது, தேசிய விருது என பல விருதுகளை பெற்று இசை சக்கரவர்த்தியாக இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கடந்த ஆண்டு, கணவரை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பலரையும் சோகத்தில் ஆழ்த்தினார். இதுகுறித்து அண்மையில் பேட்டி அளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், 29 ஆண்டு திருமண வாழ்க்கை, அதில் ஏற்பட்ட மனஉளைச்சல்களையும், புகழின் அழுத்தத்தை போன்றவற்றால் ஏற்பட்ட பிரிவு என மனம் விட்டு பேசி உள்ளார்.

திருமண வாழ்க்கை: அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை, அது வாழ்க்கையில் நீண்ட காலமாகப் படிந்து வந்த அழுத்தங்களின் விளைவாக எடுக்கப்பட்ட முடிவு. புகழ் என்பது ஒருவகையில் இருண்ட பக்கத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. குறிப்பாக எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் நான் அதிக நேரத்தை செலவிட வில்லை. இப்படி நிறைய காரணங்கள் என் வாழ்க்கையில் நடந்த விஷத்திற்கு காரணமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த இந்த அனுபவத்தின் மூலம், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கிறேன். சமீப காலமாக கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகியோருடன் அதிக நேரம் செலவிடத் தொடங்கி இருக்கிறேன். இப்போது என்னுடைய 3 குழந்தைகளும் சாய்ரா பானுவுடன்தான் வசித்து வருகிறார்கள் என்றார்.
கணவன்,மனைவி தான்: அண்மையில் ஏ.ஆர். ரகுமானின் மனைவி சாய்ரா பானு வெளியிட்டு இருந்த அறிக்கையில், நாங்கள் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை. இருவரும் கணவன் மனைவி பந்தத்தில் தான் இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டதால் நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். எந்த வகையிலும் அவருக்கு நான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. என்னை இனி யாரும் ஏ.ஆர். ரகுமானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம். நாங்கள் பிரிந்து வாழ்ந்தாலும், அவருக்காக நான் எப்போதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications