அந்த இசையை படித்துவிடுங்கள்.. அனிருத்துக்கு வேண்டுகோள் வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இப்போது அவர்தான் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக அவரது இசையமைப்பில் வேட்டையன், இந்தியன் 2, தேவரா உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகின. அடுத்ததாக கூலி, விடாமுயற்சி, தளபதி 69 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்தச் சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.

ரஜினியின் உறவினரான அனிருத் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஐஸ்வர்யா இயக்கியிருந்த அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.முக்கியமாக அனிருத்தின் இசை மெகா ஹிட்டடித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி முதல் படமான ரோஜாவில் சென்சேஷன் ஆனாரோ அதேபோல் 3 படத்திலும் ரீ ரெக்கார்டிங், பாடல்கள் என அனைத்திலுமே தனது தனித்த முத்திரையை பதித்தார்.

a r rahman anirudh kadhalikka neramillai

ஓவர் நைட்டில் ஃபேமஸ்: 3 படத்தின் ஆல்பத்தில் எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தாலும்; ஒய் திஸ் கொலவெறி பாடல் மெகா ஹிட்டானது. இதன் காரணமாக ஒரே நைட்டில் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனிருத் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அந்தப் பாடலின் வெற்றிக்கு பிறகு அனிருத் ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனார்.

தொடர் வாய்ப்புகள்: முதல் பட பாடல்களின் வெற்றிக்கு பிறகு எங்கும் அனிருத் மயமாகத்தான் இருந்தது. இளம் ஹீரோக்கள் முதல் வளர்ந்த ஹீரோக்கள்வரை அனிருத்திடம் சென்றனர். முக்கியமாக தளபதி விஜய் படம் என்றாலே அனிருத்தான் என்று ஃபிக்ஸ் செய்யப்பட்டுவிட்டது. கடைசியாக வெளியான விஜய் படங்களில் வாரிசு, GOAT படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இசையமைக்கும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கின்றன.

10 கோடி ரூபாய் சம்பளம்: விஜய் எப்படியோ அப்படியே ரஜினியும். அவரும் தனது படங்களுக்கு அனிருத் இசையமைப்பதையே விரும்புகிறார். அனிருத்தும் அதற்கேற்றபடி ரஜினிக்கென்றால் ஸ்பெஷலாக இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில்கூட அனிருத்தின் இசை தனித்து தெரிந்தது. அனைவருமே அனிருத்தின் இசையை தூக்கி வைத்து கொண்டாடிவருகிறார்கள். தமிழில் மட்டும் தடம் பதித்துவந்த அனிருத் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்: இந்நிலையில் காதலிக்க நேரமில்லை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்திடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அவர் பேசுகையில், ""அனிருத் இப்போது நன்றாக இசையமைத்துவருகிறார். ஏராளமான இசையமைப்பாளர்கள் இப்போது இருக்கிறார்கள். அந்தப் போட்டியில் நிலைத்து நிற்பது பெரிய விஷயம். திறமை இல்லாமல் அப்படி நிலைக்க முடியாது.

வேண்டுகோள்: இவற்றை செய்துவிட்டு தலைவன் தலைவன்தான், தொண்டன் தொண்டன்தான் என்று சொல்லும் அந்தப் பணிவு ஆச்சரியப்பட வைக்கிறது. உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அனிருத். க்ளாசிக்கல் இசையை படித்துவிட்டு அதில் நீங்கள் நிறைய பாடல்களை உருவாக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் அந்த இசை இளம் தலைமுறையினருக்கு அதிகம் போய் சேரும்""என்றார். அனிருத்தின் இசையமைப்பில் அடுத்ததாக விடாமுயற்சி, கூலி, தளபதி 69 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X