“என் அப்பா ஒரு லெஜண்ட்“ தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள்.. ஏஆர் ரஹ்மான் மகனின் வேதனை பதிவு!

சென்னை: ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு, தனது கணவரை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளது சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், ஏஆர் ரகுமான் குறித்து பல மோசமான வதந்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள் என்று வேதனையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்,திருமணமாகி பல வருடங்கள் கழித்து, நான் கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும். நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், எங்களுக்கு இடையில், பதட்டம், தீர்க்க முடியாத இடைவெளி இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என சாய்ரா பானு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அந்த திடீர் அறிவிப்பு ஒட்டு மொத்த ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

a r rahman saira banu ameer

விவாகரத்து முடிவு: வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல அனைத்து youtube சேனல்களிலும் ரகுமானின் விவாகரத்து செய்திதான் பேசு பொருளாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், துபாய், மும்பை என ஊர் ஊராக சுற்றி வருகிறார் குடும்பத்தை கவனிப்பது இல்லை என்றும், குடும்பத்தினர் போன் செய்தால் கூட, அதை அவர் உதாசீனப்படுத்துவதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் சென்னைக்கு வந்து குடும்பத்தோடு நான்கு வருடத்திற்கு மேலாகிறது என்றும் செய்தி பரவின.அது மட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமானிடம் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றி வந்த, மோகினி டேவும், ஏ ஆர் ரகுமான் விவாகரத்தை அறிவித்த சில மணி நேரங்களில் தன்னுடைய விவாகரத்தை அறிவித்ததால், இருவரையும் இணைத்து பல செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது.

என் அப்பா லெஜண்ட்: இதனால், மனவேதனை அடைந்த ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார் அதில், ஒரு குழந்தை சிரித்துக்கொண்டு இருக்கும் போட்டோவையும், தனது அப்பா ரஹ்மானின் போட்டோவையும் போட்டுவிட்டு, "இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டுள்ளார். மேலும், கேப்ஷனில் " என் அப்பா ஒரு லெஜண்ட், இசைத்துறையில் அவர் செய்த சாதனைக்காக மட்டுமில்லாமல், பல ஆண்டுகளாக அவர் பெற்ற மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் லெஜண்ட்டாக பார்க்கபடுகிறார்.

a r rahman saira banu ameer

வேதனை அடைகிறது: இணையத்தில் அவர் குறித்து வரும் தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகளை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. தயவு செய்து இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் இசையின் மூலம் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம் என ஏஆர் அமீர் அந்த பதிவில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X