தெனாலியை அடுத்து ஹாலிவுட் படத்தில் வரும் ரஹ்மானின் 'குரு' பட பாடல்

டிஸ்னியின் 3டி அனிமேஷன் படம் பிளேன்ஸ். இந்த படத்தில் குரு படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த தேரே பினா பாடல் இடம்பெறுகிறது. பிளேன்ஸ் காதல் சின்னமான தாஜ்மஹால் மீது பறக்கும்போது இந்த பாடல் வருமாம். பிளேன்ஸில் ரஹ்மான் இசை தவிர பிரியங்கா சோப்ரா இஷானி என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
பிளேன்ஸ் படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மும்பையில் உள்ள பிரானா அனிமேஷன் ஸ்டுடியோஸ் 3டி அனிமேஷனை கவனித்துள்ளது.
முன்னதாக ஹாலிவுட் படமான ஆக்சிடென்ட்டல் ஹஸ்பன்டில் தெனாலி படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இசையமைத்த என்ன சொல்லி என்னைச் சொல்ல என்ற பாடல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











