அன்பு கட்டளையிட்ட சீமராஜா: உடனே ஏற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், ட்ரீட் கன்பார்ம்

சிவகார்த்திகேயனுக்காக ஏஆர்.ரஹ்மான் பாடுகிறார்

Recommended Video

அன்பு கட்டளையிட்ட சீமராஜா: உடனே ஏற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் A.R.Rahman's voice for Sivakarthikeyan

சென்னை: ஏஆர்.ரஹ்மானின் மிகப்பெரிய பரிசு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கிறது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடித்துள்ள சீமராஜா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

A.R.Rahman sings a song for Sivakarthikeyan!

சிவகார்த்தியேன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோவின் ஆர்.டி.ராஜா தயாரிக்க உள்ளார். இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லராக தயாராக உள்ளது. இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்க உள்ளார்.

அடுத்தடுத்து பெரிய படங்கள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என போய்க்கொண்டிருக்கும் சிவாவுக்கு இப்படம் மிகச்சிறப்பான படமாக அமைய உள்ளது. காரணம் இப்படத்திற்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தான் ரசித்த மாபெரும் இசையமைப்பாளர் தன்னுடைய படத்திற்கே இசையமைக்கிறார் என்பதால் ஆனந்தத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் இப்படத்திற்காக போட்ட ட்யூனை சிவாவுக்கு அனுப்பியுள்ளார் ரஹ்மான். ட்யூனைக் கேட்டு ரசித்த சிவா, எனக்காக இந்த பாடலை நீங்களே பாடவேண்டுமென அன்பு கட்டளையிட்டுள்ளார். கட்டளைக்கு பணிந்த ரஹ்மான், நிச்சயம் பாடுவதாக ஒப்புக்கொண்டுள்ளாராம். அதனால் விரைவில் சிவகார்த்திகேயனுக்காக ரஹ்மான் குரல் ஒலிக்கப்போகிறது என்பது முடிவாகிவிட்டது.

இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். இவர்களுடன் யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், கோதண்டம், இஷா கோபிகர், பானுப்பிரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X