»   »  தொடர் எதிர்ப்புகளால்... இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்

தொடர் எதிர்ப்புகளால்... இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார்.

நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது.

A.R.Rahman Sri Lanka Concert Postponed

இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன.

இந்நிலையில் கொத்துக்கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில், ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் எழுந்தன.

குறிப்பாக ரகுமானின் வீட்டைச்சுற்றிலும், பல்வேறு தமிழ் அமைப்பினர் இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இதனால் இலங்கையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி, தற்போது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Music Composer A.R.Rahman's Sri Lanka Live Concert now Postponed.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil