twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கனடாவில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா: தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்...!

    |

    டொரண்டோ: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைக் கவுரவிக்கும் வகையில், கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

    பொதுவாக ஒருவரைக் கவுரவிப்பது என்றால் அவரது சிலையை நிருவுவார்கள் அல்லது அவரது பெயரைக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சூட்டுவார்கள். அந்த வகையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கவுரவிக்கும் வகையில் கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை சூட்டியுள்ளனர்.

    இந்திய திரைப்பட விழா....

    இந்திய திரைப்பட விழா....

    இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், கனடாவில் டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

    கடல் கடந்த புகழ்....

    கடல் கடந்த புகழ்....

    உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகள் குறித்து புகழப்பட்டது.

    அல்லாஹ்-ரக்ஹா-ரஹ்மான்....

    அல்லாஹ்-ரக்ஹா-ரஹ்மான்....

    பின்னர் அதன் தொடர்ச்சியாக, கனடாவின் மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் - ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப் பட்டது.

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே....

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே....

    அந்த பெருமைக்குரிய பெயர் பலகையுடன் இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 'போஸ்' தரும் போட்டோ தான் இது.

    English summary
    Markham, Ontario (Canada) has dedicated one of its street's name to A R Rahman
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X