தயாரிப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாகுபலி பிரபாஸையே மிஞ்சிடுவார் போல!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் தயாரித்து வரும் படத்தின் ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்ய 2 ஆண்டுகளாக 1000 ஆடிஷன் நடத்தியுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை சார்ந்த படத்தை தயாரித்து வருகிறார். 99 சாங்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை தனது ஒய்எம் மூவீஸ் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் 10 - 12 பாடல்கள் உள்ளன. படத்திற்கு ஏற்ற ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்ய 1000 ஆடிஷன்கள் நடத்தியுள்ளார் ரஹ்மான். தேர்வு செய்யப்பட்ட இருவரும் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரியில் ஓராண்டு இசை பயிற்சி எடுத்துள்ளனர்.
மேலும் ஹைதரபாத்தில் நடந்த ஆக்டிங் ஒர்க்ஷாப்புகளிலும் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர். படப்பிடிப்பு இந்தியா, உக்ரைனில் நடந்துள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விரைவில் இசை ஆல்பத்தை வெளிடுவதாக ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார். ரஹ்மான் 4 ஆண்டுகளாக இந்த பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்காக பிரபாஸ் 5 ஆண்டுகள் ஒதுக்கினார். இப்ப தலைப்பை மறுபடியும் படிச்சுப் பாருங்க.


Click it and Unblock the Notifications











