US Elections: கமலா ஹாரீசை ஆதரித்து ஏஆர் ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..களைகட்டும் வாஷிங்டன்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளதால், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்தது. ஜூலை 21ஆம் தேதி அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக இப்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கமலா ஹாரீஸ் களமிறங்கினார். அவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு உள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசை கச்சேரி: இந்நிலையில், ஏஏபிஐ தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஏ.ஆர். ரஹ்மானுடன் ஒரு சிறப்பான மாலைப் பொழுதை கண்டுகளிக்க தயாராக இருங்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அறிவித்து இருந்தது.
கமலா ஹாரீஸ்: இதில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், துணை ஜனாதிபதி கமல் ஹாரிஸுக்கு ஆதரவாக S ஆசியாவில் 30 நிமிடம் பாட இருக்கிறார். இது நவம்பர் 5 மாதம் நடக்க இருக்கும் அமெரிக்க பொதுத் தேர்தலுக்கு உத்வேகமாக இருக்கும் என்றும், இது கமலா ஹாரீஸ் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இது AAPI விக்டரி ஃபண்டின் YouTube இல் அக்டோபர் 13 அன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும். 30 நிமிட நிகழ்ச்சியில் ரஹ்மானின் பிரபலமான பாடல்கள் மற்றும் கமலா ஹாரிஸின் வரலாற்று வேட்புமனு குறித்த குறும்படமும் இடம் பெற உள்ளது. அதில் ரஹ்மானுடன், இந்தியாஸ்போரா நிறுவனர் எம் ஆர் ரங்கசாமியும் கலந்து கொள்ள இருக்கிறார்.
இளைஞர்களின் ஆதரவு: 1872 அமெரிக்க அதிபர் தேர்தலில் விக்டோரியா வுட்ஹல் என்ற பெண் முதன்முதலில் போட்டியிட்டார். அதன் பின்னர் 2016ம் ஆண்டு ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டு தோற்றார். தற்போது, பெருவாரியான இளைஞர்களின் ஆதரவுடன் கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். இதில் யார் வெற்றி வாகைசூடுவார் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











