மகன் அமீனுடன் இசை விருந்து படைத்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலான வீடியோ

சென்னை: ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் இணைந்து இசையமைத்துள்ளனர். அதை ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஒகே கண்மணி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு இணைந்து இசையமைத்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர். இவர் 2008ஆம் ஆண்டில் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்றார். இந்திய சினிமாக்களில் மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

A.R.Rahman with his son A.R.R.Ameen composed Music viral on social media

ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1992ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலமாக சினிமா உலகில் இசையமைப்பாளாரக அறிமுகம் ஆனவர். இவருடைய இசையை கேட்பதற்கென்றே உலகம் முழுவது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

சினிமாவில் காலடி வைத்த ஆரம்ப காலங்களில் ஏ.ஆர்.ரகுமான் மீது சில விமர்சனங்கள் எழுந்தன. ஏ.ஆர்.ரகுமானுக்கு வெஸ்டர்ன் இசை மட்டுமே வரும், மண் மணக்கும் கிராமிய படங்களுக்கு இசையமைப்பது அவருக்கு சரியாக இருக்காது என்று தவறான விமர்சனங்களை வைத்தனர்.

அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கடந்த 1993ஆம் ஆண்டில் கிழக்கு சீமையிலே திரைப்படத்திற்கு முழுக்க கிராமத்து பாணியில் இசையமைத்து அந்த படத்தை ஹிட்டாக்கினார்.

A.R.Rahman with his son A.R.R.Ameen composed Music viral on social media

அடுத்ததாக, 1999ஆம் ஆண்டில் காதலர் தினம் மற்றும் சங்கமம் படங்களுக்கு இசையமைத்தார். இதில், காதலர் தினம் முழுக்க முழுக்க சிட்டி சப்ஜெக்ட் திரைப்படம். ஆனால், சங்கமம் திரைப்படம் அதற்கு மாறாக கிராமத்து படம். இரு வேறு படங்களையும் ஹிட் ஆக்கியது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இப்படி பல சாதனைகளை செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

தற்போது ஏ.ஆர்.ரகுமானும் அவரது மகன் ஏ.ஆர்.ஆர்.அமீனும் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

அந்த வீடியோவை இது வரைக்கும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.

ஏ.ஆர்.ஆர்.அமீன் வளர்ந்து வரும் ஓர் இசையமைப்பாளர். தந்தையைப் போலவே தானும் இசையமைப்பாளராக வரவேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறார் ஏ.ஆர்.ஆர்.அமீன். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அமீன் இருவரும் இதற்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓகே கண்மணி படத்தில் ஒரு பாடலுக்கு இணைந்து பணியாற்றி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X