ஃப்ரெண்ட்ஷிப் படக்குழுவுடன் இணைந்து படம் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு!
சென்னை : அறிமுக இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் ஃப்ரெண்ட்ஷிப்.
ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா இதில் லீட் ரோலில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .
செப்டம்பர் 17ஆம் தேதி ஃப்ரெண்ட்ஷிப் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை படக்குழுவுடன் இணைந்து பார்த்து ரசிக்க ஓர் அரிய வாய்ப்பை படக்குழு அறிவித்துள்ளது.

கதாநாயகியாக அறிமுகமாகும்
ஒருவழியாக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு வருகிறது அந்த வகையில் பிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படமும் திரையில் வெளியாக தயாராக உள்ளது. பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா அதில் மிகச் சிறப்பாக விளையாடி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நிகழ்ச்சியில் இருக்கும்போதே படவாய்ப்புகள் இவருக்கு குவிந்து வர இப்பொழுது ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.

பாலியல் வன்முறைகளை
அறிமுக இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் இந்தியன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை பற்றிய படமாகவும் கல்லூரி கதை களத்தில் ஃப்ரெண்ட்ஷிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும் இப்படம் உருவாகி உள்ளது.

செப்டம்பர் 17
ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் என விறுவிறுப்பாக இருக்கும் இந்த திரைப்படம் திரையரங்குகள் மூடப்பட்டதால் நேரடியாக ஓடிடியில் வெளியாக தயாராக இருந்தது. இந்த நிலையில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு புதிய திரைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாக வர ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகிறது என அறிவிக்கப்பட்டது.

பெண்ணை கடத்த
நேற்று படக்குழு அட்டகாசமான ஸ்னீக் பீக் காட்சியையும் வெளியிட்டிருந்தது. அதில் ஆரம்பத்திலேயே மூன்று பேர் ஒரு பெண்ணை கடத்த அதைத் தொடர்ந்து அர்ஜுனனின் வெறித்தனமான சண்டை ஹர்பஜன்சிங் மற்றும் சதீஷ் குற்றவாளியாக கைவிலங்கின் பிடியில் என பார்க்கவே சுவாரசியமாக இருந்த ஸ்னீக் பீக் காட்சி இப்படத்தை பார்க்க மேலும் தூண்டியுள்ளது.

படக்குழுவுடன் பார்க்க அரிய வாய்ப்பு
இந்த நிலையில் ப்ரெண்ட்ஷிப் படத்தை செப்டம்பர் 17 -ஆம் தேதி படக்குழுவுடன் இணைந்து பார்க்க அரிய வாய்ப்பை படக்குழு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதன்படி செப்டம்பர் 17ஆம் தேதி காலை ரோகினி திரையரங்கில் 8மணிக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. எனவே ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











