Mysskin - கமலுக்கே காது குத்த பார்த்த மிஷ்கின்?.. பலே ஆளாதான் இருந்திருக்காரு.. ஆனா ஆண்டவரு உஷாரு

சென்னை: Mysskin (மிஷ்கின்) கமல் ஹாசனிடம் சென்று அவர் நடித்த படத்தின் கதையையே மிஷ்கின் கூறியதாக ஒரு தகவல் உலாவுகிறது.

கோலிவுட்டின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பையே பெற்றன.

A report is doing the rounds that Mysskinwent to Kamal Haasan and told him the story of his film

அடிவாங்கிய மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

பிசாசு: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். தற்போது அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது.

நடிகர்: இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகிறார் மிஷ்கின். சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் ஏற்கனவே யூத் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தார் மிஷ்கின். அதேபோல் மாவீரன் படத்திலும் அவரது நடிப்பு ரசிக்கும்படியாகவே இருந்தது.

அடுத்த படம்: இந்த சூழலில் மிஷ்கின் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறார். அதனை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார் இயக்குநர். விஜய் சேதுபதியும், மிஷ்கினும் இணையவிருக்கும் இந்தப் படமானது நீண்ட காலமாக திட்டமிடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

A report is doing the rounds that Mysskinwent to Kamal Haasan and told him the story of his film

கமலுக்கு காதுகுத்து: இந்நிலையில் மிஷ்கின் குறித்து ஒரு தகவல் கோலிவுட்டில் உலாவ ஆரம்பித்திருக்கிறது. அதாவது அவர் ஒருமுறை கமல் ஹாசனிடம் கதை சொல்ல சென்றாராம். கதை சொல்ல ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே கமல் ஹாசன் இது ஏற்கனவே நான் நடித்த படம் மாதிரியே இருக்கிறதே. அதில் இந்த கேரக்டரைக்கூட செய்திருப்பேன் என பேரிகார்டு போட்டுவிட்டாராம். அதன் பிறகு இன்னொரு கதையை சொன்னாராம் மிஷ்கின். அந்தக் கதை ஆரம்பித்த சில நொடிகளிலேயே இது அந்த மொழியில் அந்த நடிகர் நடித்த படமாச்சே என புள்ளிவிவரத்துடன் எடுத்து வைத்தாராம் கமல் ஹாசன். பிறகு நான் இன்னொரு கதையோடு வருகிறேன் என்று சொல்லி சென்ற மிஷ்கின் அதன் பிறகு கமல் ஹாசனை அணுகவே இல்லை என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X