மை நேம் இஸ் பில்லா டூ கியாரே செட்டிங்கா.. அதிர வைக்கும் ரஜினியின் "டான்" பட வரிசை!

ரஜினிகாந்த் நடித்த கேங்ஸ்டர் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் வேட்டையை நடத்தியது.

By Lakshmi Priya

Recommended Video

காலா..மக்களே முடிவு எடுக்கலாம்!- வீடியோ

சென்னை: ரஜினிகாந்த் நடித்த கேங்ஸ்டர் திரைப்படங்கள் வசூலை அள்ளியது.

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தால் ரஜினிகாந்த் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளது போல் தெரிகிறது.

நெல்லையில் இருந்து மும்பை தாராவியில் செட்டிலாகும் தாதாவின் கதைதான் காலா என்று சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி படங்கள்

ரஜினி படங்கள்

ரஜினி நடித்த கேங்ஸ்டர் படங்களில் பில்லா மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 1980-இல் வெளியான இந்த படம் 1978-இல் இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெற்றி பெற்ற டான் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் 25 வாரங்களுக்கு மேல் ஓடியது. இந்த படத்தின் மூலம் ரஜினிகாந்த் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இந்த படம் சற்று மாறுதல் செய்யப்பட்டு இந்த காலத்துக்கு ஏற்ப பில்லா 2 வாக நடிகர் அஜித் நடிப்பில் உருவானது. இந்த படமும் வசூலில் சாதனை படைத்தது.

மாணிக் பாட்ஷா

மாணிக் பாட்ஷா

ரஜினி நடிப்பில் பாட்ஷா என்ற படம் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஹீரோவுக்கு சமமான கேரக்டரில் ரகுவரன், ஆன்டனி கேரக்டரில் அசத்தியிருப்பார். ரகுவரன் தற்போது மரணமடைந்துவிட்டதால் இந்த படத்தை மீண்டும் எடுத்தாலும் ரகுவரன் நடிப்பை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்று ரஜினிகாந்தே தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு பாட்ஷா சிறந்த படமாகும். மும்பையில் டானாக இருந்த மாணிக் பாட்ஷா, தனது டான் தொழிலை மூட்டை கட்டி வைத்து விட்டு சென்னையில் மாணிக்கம் என்ற பெயரில் சாதாரண ஆட்டோ டிரைவராக நடித்திருப்பார். 15 மாதங்களுக்கு தொடர்ந்து தியேட்டர்களில் ஓடியது.

மலேசியா டான்

மலேசியா டான்

கபாலியில் மலேசியாவில் வசிக்கும் டானாக நடித்திருப்பார். முதல் பாதி முழுவதும் அநியாயம் செய்யும் டான்களை களையெடுக்கும் பணிகளை ரஜினி செய்திருப்பார். இரண்டாவது பாதியில் மனைவி குமுதவள்ளியை தேடி செல்லும் கணவனாக கதை நகரும். இதில் அதிரடியாக சண்டை காட்சிகள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. காதலனாக, கணவனாக, தந்தையாக தனது நடிப்பை ரஜினி அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

எதிர்பார்ப்பில் காலா படம்

எதிர்பார்ப்பில் காலா படம்

காலா திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ரஜினி மும்பை தாராவியில் செட்டிலாவது போல் உள்ளது இந்த படம். தாராவி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ரஜினி போராடுவது போன்று காட்சிகள் அமைந்திருக்கும் என்று தெரிகிறது. போராடுவோம் போராடுவோம் என்ற பாடல் புரட்சியை ஏற்படுத்துவது போல் இருக்கிறது. கருப்பு உடையில் ரஜினிகாந்த் வில்லன்களை புரட்டியெடுக்கிறார். ரசிகர்கள் காலாவை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X