2019ல் திருமண பந்தத்தில் இணைந்த திரை நட்சத்திரங்கள்... யார் யாருன்னு பாருங்க!

Recommended Video

Arya Sayyeesha in Thailand | Teddy Wrap up

சென்னை: 2019 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணம் என்பது மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய ஒரு நிகழ்வு. யாருக்கு திருமணம் என்றாலும் அதுகுறித்த தகவல்களை அறிந்துகொள்வதில் அனைவருக்குமே ஆர்வம்தான்.

அதிலும் சினிமாக்காரர்களின் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் குறித்த தகவல்களை காண்போம்.

ஆர்யா - சாயிஷா

ஆர்யா - சாயிஷா

நட்சத்திர ஜோடியாக அறியப்பட்ட நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் இந்த ஆண்டுதான் நடைபெற்றது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து நடித்தனர். அதனை தொடர்ந்து காதலித்து வந்த இருவரும் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் செய்துக்கொண்டனர்.

சவுந்தர்யா - விசாகன்

சவுந்தர்யா - விசாகன்

அவர்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் மகளும் கோச்சடையான் பட இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்தும் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார். ஏற்கனவே திருமணமான சவுந்தர்யா ரஜினிகாந்த், முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

பிரபலங்கள் பங்கேற்பு

பிரபலங்கள் பங்கேற்பு

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவரும் தொழிலதிபருமான விசாகனை திருமணம் செய்துக்கொண்டார். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், முக அழகிரி உட்பட திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இயக்குநர் ஏஎல் விஜயும் இந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மீண்டும் திருமண வாழ்க்கையில் இணைந்தார். கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏஎல் விஜய், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

மருத்துவருடன் திருமணம்

மருத்துவருடன் திருமணம்

நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடியவே ஐஸ்வர்யா என்ற பொதுநல மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார் இயக்குநர் ஏஎல் விஜய். இவர்களின் திருமணம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.

மதுமிதா - மோசஸ்

மதுமிதா - மோசஸ்

நடிகை ஜாங்கிரி மதுமிதாவும் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் மதுமிதா. டிமான்டி காலணி, இதற்குதானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற அவர் சக ஹவுஸ்மேட்ஸ்களின் டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது மாமா மகனான மோசஸை திருமணம் செய்துக்கொண்டார்.

காதலருடன் திருமணம்

காதலருடன் திருமணம்

சீரியல் நடிகையான மைனா நந்தினி நடிகை நந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மைனாவாக அறிமுகமானார். இவரது முதல் கணவரான கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதால் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த நவம்பர் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

சதீஷ் - சிந்து

சதீஷ் - சிந்து

நகைச்சுவை நடிகரான சதீஷ் கடந்த 11ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சினின் தங்கை சிந்துவை திருமணம் முடித்துள்ளார் சதீஷ். சிக்ஸர் படத்தில் சதீஷ் நடித்திருந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

சீரியல் நடிகை நித்யா ராமும் அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். சன்டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் அறிமுகமானவர், நடிகை நித்யா ராம். மலையாளத்தில் ஹீரோயினாக நடித்த இவர், தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ் ‘என்ற தொடரிலும் தலைக்காட்டி வருகிறார். ஏற்கனவே திருமணமான நித்யா ராம் தனது காதலரான ஆஸ்திரேலிய தொழிலதிபரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X