சினிமா டூ அரசியல்… விஜய்யின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார் நடிகர் விஜய். இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் அனைவரும் வியந்த பார்க்கும் அளவிற்கு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். இந்த நேரத்தில் விஜய்யின் சினிமா பயணம் முதல் அரசியல் பயணம் வரை பார்க்கலாம்.

தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பல வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநராக இருந்ததால், விஜய் சினிமாவிற்கு வந்தது இயல்பாகவே இருந்தது. விஜய் தனது பத்தாவது வயதில் பி.எஸ்.வீரப்பா தயாரித்த வெற்றி என்ற படத்தில் விஜயகாந்தின் சிறுவயது ரோலில் நடித்தார். அதைத்தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு , இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் போன்ற படத்தில் நடித்தார்.

tvk maanaadu tamilaga vettri kazhagam vijay tvk

தளபதி விஜய்: குழந்தை நட்சத்திரமாக இருந்த விஜய், நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக நடித்தார். பல வெற்றிப்படத்தை கொடுத்த தனது அப்பா இயக்கிய படத்தில் நடித்த போதும், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, ரசிகன், தேவா,கோயம்புத்தூர் மாப்பிள்ளை என பல படத்தில் நடித்த போதும் அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால், விஜய்க்கு ராசி இல்லாத நடிகர் என்றும் முகம் சரியில்லை என்றும் கோலிவுட் சினிமா இவரை வசைபாடி ஒதுக்கிவைத்தது. அப்போதுதான், விஜயகாந்த் நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். அந்த படம் விஜய்க்கு ஒரு பெயர் சொல்லும்படமாக மாறியது. அதன்பின் லவ் டூ டே, காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக என அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்து இருக்கிறார்.

காத்திருக்கும் மக்கள்: எந்த முகம் சினிமாவிற்கே லாயக்கி இல்ல, ராசி இல்ல என்று சொன்னார்களோ அந்த முகத்தை பார்க்க இன்று பல லட்சக்கணக்கானோர் நேற்று இரவு முதலே மாநாடு நடைபெறும் இடத்தில் கூடி உள்ளனர். இசைவெளியீட்டு விழா என்றாலே, குட்டி ஸ்டோரி சொல்லி தெறிக்கவிடும் விஜய் என்று என்ன சொல்ல போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்து ஒட்டுமொத்த ரசிகர்கள், தொண்டர்கள், பிரபலங்கள், நிர்வாகிகள், அரசியல் பிரபலங்கள் என்று ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் சொல்ல வருவது என்ன: ஆரம்பமே அசத்தல் என்பது போல கட் அவுட்டியே மாஸ் காட்டி உள்ளார். இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாததை விஜய் செய்து இருக்கிறார். வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், மறுபுறம் அம்பேத்கர், சுதந்திர போராட்டர் வீரர் அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு நடுவே விஜய் நிற்பது போன்று கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்-அவுட்களை வைத்திருப்பதன் மூலம் விஜய் சொல்ல வருவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், மாநாட்டுக்கு மட்டும் 80 கோடி ருபாய்க்கு மேல் தனது சொந்த பணத்தை செலவு செய்து இருக்கிறார். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாப்பாடு, பார்க்கிங் வசதி, 5 நுழைவு வாயில், 500க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள், பஞ்சர் கடை, 150க்கும் அதிகமான மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ் சேவை, தனியார் பாதுகாப்பு குழு என்று ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X