Rashmika: ராஷ்மிகாவுக்கு தாலி கட்ட குதிரையில் ராஜா போல வந்த விஜய் தேவரகொண்டா.. அரண்மனை திருமணம்னா சும்மாவா?

உதய்ப்பூர்: நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல், வந்தவர்களும் திருமணத்திற்கு வரும்போது மொபைல் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்கப்பட்டிருந்தது. திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அவர்கள் இருவருமே தங்களது திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். அதில் ராஷ்மிகா பகிர்ந்துள்ள புகைப்படங்களில், விஜய் தேவரகொண்டா மணமேடைக்கு குதிரையில் வந்துள்ளார் என்பது தெரிகிறது. இதைப் பார்த்த பலரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு தாலி கட்ட, விஜய் தேவரகொண்டா குதிரை ஏறி வந்திருக்காரேப்பா என்றும் அரண்மனைத் திருமணம் என்றால் சும்மாவா என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

A Royal Wedding Vijay Deverakonda s Grand Horseback Entry at His Wedding with Rashmika Mandanna
Photo Credit:

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா கடந்த சில ஆண்டுகளாகவே, காதலித்து வருகிறார்கள் என்ற பேச்சு திரைத்துறையில் பரவலாக இருந்து வந்தது. இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்ற தகவல் அவர்கள் இருவருமே அறிவிக்கும் முன்னர் சமூக வலைதளத்தில் பரவலாக பரவியது.

இப்படி இருக்கையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவோ, உண்மையான காதலை நான் விஜய் தேவரகொண்டாவிடம் பார்த்தேன் என்றும், ராஷ்மிகா மந்தனா எனது பெஸ்ட் பிரண்ட் அதனால் தான் நான் அவரைத் திருமணம் செய்து கொண்டேன் என்றும் கேப்ஷனிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X