Rajinikanth - பெண் இல்லாமல் தூங்கவே முடியாது என்று பேசினாரா ரஜினிகாந்த்? உண்மை என்ன?
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஒரு படத்தின் ப்ரோமோஷனில் ரஜினிகாந்த் தனது அந்தரங்க விஷயத்தை பற்றி பேசியதாக இணையத்தில் தகவல் ஒன்று தீயாக பரவிவருகிறது.
சினிமாவில் அறிமுகமான சமயத்தில் அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும் பெரும் வெற்றி கண்டுசூப்பர் ஸ்டார் என்ற அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் வசூல்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களாக வெற்றிக்கு ஏங்கிகொண்டிருந்த ரஜினிக்கு இந்தப் படம் கம்பேக்காக அமைந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் ஜெயிலர் வெற்றியின் மூலம் அவர் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றும் சிலாகிக்கின்றனர். படம் இதுவரை உலகளவில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
சர்ச்சையான பயணம்: தமிழ்நாடே ஜெயிலருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த சூழலில் ரஜினிகாந்த்தோ ரிலீஸுக்கு சில நாட்கள் முன்னதாக இமயமலை சென்றார். அதுகுறித்து பேசிய அவர், நான்கு வருடங்களுக்கு பிறகு செல்கிறேன் என சிம்ப்பிளாக முடித்துவிட்டார். அங்கு சென்று வழிபாடு நடத்திய அவர் அங்கிருந்து நேராக சென்று ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர், முதலமைச்சர், எம்.எல்.ஏ உள்ளிட்டோரை சந்தித்தார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தபோது அவரது காலில் விழுந்தது சர்ச்சையானது. ஆனால் வயது குறைவானவராக இருந்தாலும் அவர் துறவியாக இருந்தாலும் காலில் விழுவது என் வழக்கம் என அதற்கும் ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டார்.
ஓபன் டாக்: ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுபவர். பல சமயங்களில் அது அவருக்கு பாராட்டை பெற்றுக்கொடுத்தாலும் சில சமயங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட குடிக்காதீர்கள் என தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த ரஜினிகாந்த்; படத்தின் ஷூட்டிங்போது நெல்சன் திலீப்குமார் தன்னிடம் எந்தெந்த ஹீரோயின்கள் உங்களை லவ் பண்ணினாங்க என கேட்டதாக ஓபனாக பேசினார்.
ரஜினியின் குடி: ரசிகர்களிடம் குடிக்க வேண்டாம் என ரஜினி சொல்வதற்கு ரஜினிகாந்த்துக்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் அவர் அளவுக்கு மீறி குடித்தவர்.காலை 8 மணிக்கே தானும் ரஜினிகாந்த்தும் குடித்ததாக நடிகர் ராதாரவிகூட ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இந்தச் சூழலில் தனது அந்தரங்க விஷயம் குறித்து ரஜினிகாந்த் ஓபனாக பேசியதாக தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது அந்தத் தகவலின்படி சத்யராஜ் நடித்த சாவி படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்டாராம் ரஜினிகாந்த். அப்போது பேசிய அவர், "அந்தரங்கம் என்பது பரமசுகமான ஒன்று. அதுதான் ஆனந்தம். அதைவிட பெரிய ஆனந்தம் எதுவும் இல்லை. வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு இது தவறான விஷயம் இல்லை. அதேசமயம் பொது சேவை செய்பவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கிறது. பெண் இல்லாமல் தூங்க முடியாது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டது" என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் இதெல்லாம் சுத்தமான பொய். அவர் அவ்வாறு பேசியிருக்க வாய்ப்பே இல்லை. வேண்டுமென்றே ரஜினி மீது அவதூறு பரப்புவதற்காக இப்படியான தகவல்களை பரப்புகிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











