Abdul Hameed: லலிதாவின் பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீதுக்கு என்ன ஆச்சு? இணையத்தில் பரவும் வதந்தி!
சென்னை: இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து அதன் பின் சன் தொலைக்காட்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீத்,உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக வதந்தி ஒன்று இணையத்தில் பரவி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை வந்து விட்டாலே லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே தனிக்கூட்டம் ஒன்று, டிவி சுற்றி அமர்ந்து இருப்பார்கள். மான்டேஜ் முடிந்து, பி.எச். அப்துல் ஹமீத் மைக்கை பிடித்துக்கொண்டு, பெருத்த கரகோஷத்திற்கு மத்தியில் தனது கணீர் குரலில் வேடிக்கை வினோத இசை நிகழ்ச்சி லலிதாவின் பாட்டுக்கு பாட்டு என்றதும். அந்த நிகழ்ச்சியோடு சேர்ந்து நாமும் பாட்டுப்பாட தயாராகி… 'மா’…சொல்லுவாரா.. இல்ல 'ம’ என்று யோசித்து பாட்டுப்பாட தயாரான 90ஸ் கிட்ஸ்கள். இந்த நிகழ்ச்சியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

லலிதாவின் பாட்டுக்கு பாட்டு: தனக்கே உரிய கணீர் குரலாலும், தமிழ் உச்சரிப்பு, சரியான வசனம் என மக்கள் மனதை கவர்ந்தவர் பிஎச் அப்துல் ஹமீது. சன் தொலைக்காட்சியில் பாட்டுக்கு பாட்டு இசை நிகழ்ச்சியை தொடங்கிய அப்துல் ஹமீது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய உடன், அந்த தொலைக்காட்சியில் அதே பெயரில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதை அடுத்து, அவர் எங்கே போனார் என தெரியாமல் இருந்தது.
வதந்தி: இதையடுத்து அப்துல் ஹமீது உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவியது. அவரது தரப்பு இது வதந்தி என்றும், அவர் இலங்கையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும். இணையத்தில் பரவும் செய்தி வதந்தி என்றும் தெரிவித்துள்ளது. இவரை பற்றி பல்வேறு வதந்திகளும் அடிக்கடி பரவி வந்தது. அவர் விபத்தில் இறந்து விட்டார் என்றும், உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார் என்றும் மூன்று முறை அவர் காலமானதாக செய்திகள் பரவி இருந்தது. தற்போதும் அதே போல ஒரு செய்தியை விஷமிகள் பரப்பி உள்ளனர்.
வறுமையான குடும்பம்: இலங்கையில் பிறந்த அப்துல் ஹமீது, சிறு வயதில் வறுமை கோட்டிற்கும் கீழ் இருந்த தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். தந்தையை இரண்டாம் உலகப்போரில் இறந்துவிட,தாய் ஹாசியாவின் கண்காணிப்பில் 4 பிள்ளைகளில் ஒருவராக வளர்ந்தார். பள்ளியில் படிக்கும் போதே வசனம் பேசுவதில் திறமையான இவர், வீர பாண்டிய கட்ட பொம்மன் வசனத்தை பேசி கைத்தட்டலை பெற்றார். அதிலிருந்துதான் இவருடைய வாழ்க்கை தொடங்கியது. இந்த தகவலை அப்துல்ஹமீது ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











