தகராறு செய்த கள்ளக்காதலன்: குடும்பத்துடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சீரியல் நடிகை.. சென்னையில் பகீர்

சென்னை: உறவை துண்டித்த பிறகும் தொல்லைக் கொடுத்து வந்த கள்ளக்காதலனை சீரியல் நடிகை ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக சீரியல் நடிகைகள், சீரியல் நடிகர்கள், சினிமா துணை நடிகை, நடிகர்கள் சர்ச்சைகளில் சிக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இவர்களின் பெயர் அதிகம் கள்ளக்காதலில்தான் அடிபட்டு வருகிறது.

அண்மையில் சீரியல் நடிகை மகாலட்சுமி சீரியல் நடிகர் ஈஸ்வரின் கள்ளக்காதல் விவகாரம் வெளியாகி சந்தி சரித்தது. இதனால் சீரியலுக்கே என்ட்கார்டு போடும் நிலைமை வந்துவிட்டது.

தற்கொலை

தற்கொலை

அதோடு விஜய் டிவி சீரியலின் மற்றொரு ஜோடியும் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. அண்மையில் கள்ளக்காதல் விவகாரத்தில் துணை நடிகையின் கணவர் ஒருவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துணை நடிகர் கொலை

துணை நடிகர் கொலை

இந்நிலையில் கள்ளக்காதல் விவகாரத்தால் துணை நடிகை ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து துணை நடிகர் ஒருவரை கொலை செய்துள்ளார். அதாவது சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் தேவி.

பழக்கம்

பழக்கம்

சினிமாவில் துணை நடிகையாக உள்ள தேவி, சீரியலிலும் நடித்து வருகிறார். இவரது கணவர் சங்கர். இந்நிலையில் தேவிக்கும் துணை நடிகரான ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கண்டித்த கணவர்

கண்டித்த கணவர்

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த தேவியின் கணவர் சங்கர், மனைவியை கண்டித்துள்ளார்.

வேறு வீடு

வேறு வீடு

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரவியுடனான உறவை துண்டித்துள்ளார் தேவி. அதோடு வீட்டையும் மாற்றிவிட்டு சென்றுள்ளார்.

குடிபோதையில் தகராறு

குடிபோதையில் தகராறு

ஆனால் தேவியை மறக்க முடியாத ரவி, தேவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கொளத்தூரில் உள்ள தேவியின் சகோதரி லட்சுமியின் வீட்டுக்கு சென்ற ரவி, குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.

சுத்தியலால் தாக்குதல்

சுத்தியலால் தாக்குதல்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேவி அவரது கணவர் சங்கர், தேவியின் சகோதரி மற்றும் அவரின் கணவர் சவரியார் ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக் கட்டை மற்றும் சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

4 பேரும் சரண்

4 பேரும் சரண்

இதில் படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து 4 பேரும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

நான்கு பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துணை நடிகை கள்ளக்காதலனை குடும்பத்துடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X