Just In
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
சென்னை: ஹேமந்தால் பிரபல தொகுப்பாளினி ஒருவர் கர்ப்பமானதும், கருவை ஹேமந்த் கலைத்ததும் தெரியவந்துள்ளது.
சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
தனது காதல் கணவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போதே சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை பிடிக்காது
ஆனால் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதை அவரது குடும்பத்தினரும் சரி திரைத்துறை வட்டாரத்தினரும் சரி ஏற்றுக்கொள்ளவில்லை. சித்ராவுக்கு தற்கொலை முடிவு பிடிக்கவே பிடிக்காது.

பிரேத பரிசோதனை
மற்றவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பார். அவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்று கூறி வந்தனர். ஆனால் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பதை உறுதி செய்தது.

சிறையில் அடைப்பு
இதனை தொடர்ந்து ஹேமந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் சண்டை போட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 6 நாட்கள் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட ஹேமந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று பேருடன் காதல்
ஆனால் சித்ராவின் மாமனாரான ஹேமந்த்தின் தந்தை, சித்ராவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. ஹேமந்துக்கு முன்பு அவர் மூன்று பேரை காதலித்துள்ளார் என்றும் அவர்களின் மிரட்டலால் சித்ரா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறினார்.

மாதத்துக்கு ஒரு பெண்
ஆனால் ஹேமந்த் தந்தையின் இந்த குற்றச்சாட்டுக்கு சித்ராவின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே சித்ராவின் தோழிகள் பலரும் ஹேமந்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறினர். ஒரு மாதத்துக்கு ஒரு பெண் என ஹேமந்த் சுற்றுவார் என்றும் கூறினர்.

அதிர வைக்கும் நண்பர்
இதனிடையே ஹேமந்தின் நண்பரான ரோஹித்தும் ஹேமந்த் குறித்து அதே குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், பலரையும் மிரட்டி பணம் பறித்ததாகவும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறார். சித்ராவை ஹேமந்த் எந்தளவுக்கு டார்ச்சர் செய்தார் என்றும் கூறி அதிர வைத்து வருகிறார்.

பிரபல தொகுப்பாளினி
இந்நிலையில் ஹேமந்த் குறித்த மற்றுமொரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சித்ராவுக்கு முன் ஹேமந்த்திற்கு பிரபல பெண் தொகுப்பாளினி ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

கர்ப்பம் கலைப்பு
அதுமட்டுமின்றி, ஹேமந்துடன் பழகியதால் அந்த பெண் கர்ப்பமாக இருந்ததாகவும் இதனை அறிந்த ஹேமந்த், அவரின் கர்ப்பத்தை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் நிச்சயம் சித்ரா மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பது உறுதியாகியுள்ளது என்று கூறி வருகின்றனர்.