twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்”- மதுவினால் கசங்கி கருகிப் போகும் குழந்தைகள் உலகை காட்டும் குறும்படம

    |

    சென்னை: பட்டாம்பூச்சிகள்...குழந்தைகள் உலகத்தில் வண்ணமயமான இவற்றிக்கு என்றும் இடம் உண்டு. ஆனால், குழந்தைகளையே பட்டாம் பூச்சிகளின் மறு உருவமாக சித்தரித்து வெளிவந்துள்ள "பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்" என்கின்ற குறும்படம் பலரின் பாராட்டினைப் பெற்றுள்ளது.

    தந்தையின் மது என்னும் கொடிய அரக்கனால் கண் முன்னே அம்மாவின் இறப்பைக் காணும் குழந்தைகளின் மன நிலைமையை கண்முன்னே நிறுத்தியுள்ளது இக்குறும்படம்.

    அதனால் அவர்களின் மனதில் ஆழமாக ஏற்படும் சோகத்தினையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது இப்படம். அந்தக் குழந்தைகளும் இயல்பாக தங்களது நடிப்பினை பிரதிபலித்துள்ளனர்.

    வெளித்தெரியும் மனதின் வலி:

    வெளித்தெரியும் மனதின் வலி:

    குழந்தைகளின் மனத்தாக்கம் அப்பா, அம்மா விளையாட்டில் வெளிப்படுவதும், கனவின் பாதிப்பே தந்தைக்கு வலியினைக் கொடுப்பதையும் அழகாக காட்டியுள்ளனர் படக்குழுவினர்.

    மதுரையில் விருது:

    மதுரையில் விருது:

    இக்குறும்படமானது மதுரையில் நடந்த இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் தேர்ந்து எடுக்கப்பட்டு 2015 ம் ஆண்டு சென்னையில் "இது மற்றும் அது" திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இயக்குனர் மிஸ்கின் மற்றும் இயக்குனர் ராம் அவர்களின் பாராட்டு பெற்றுள்ளது.

    கவிதையின் தாக்கம்:

    கவிதையின் தாக்கம்:

    இக்குறும்படமானது விகடனில் "சொல்வனம்" பகுதியில்வெளி வந்த கவிஞர் சூ. சிவராமனின் "அவனின் குழந்தைகள்" என்ற கவிதையினை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டது.

    இயக்கமும், நடிப்பும்:

    இக்குறும்படத்தை புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார். இவர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக பணி புரிந்து வருகிறார். இப்படத்தில் பாண்டியன் நன்மாறன், பேபி பிரசன்னா, பேபி ஈஸ்வரி மற்றும் சுமித்ரா ராஜேந்திரன் நடித்துள்ளனர்.

    English summary
    The short film "Patampoochigalin vaakkumulam" reflects children's feel in a best way.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X