இயக்குநர் எச்.வினோத் குறும்படத்தை காப்பி அடித்தாரா? அஜித் படத்திற்கு வந்த புது சர்ச்சை!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் குறும்படத்தை காப்பி அடித்து அஜித் படத்தை இயக்கி உள்ளதாக புது சர்ச்சை எழுந்துள்ளது.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று,நேர்கொண்டபார்வை, வலிமை, போன்ற படங்களை இயக்கிய எச் வினோத் அண்மையில் துணிவு படத்தை இயக்கினார்.

துணிவு படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

போனிகபூர், எச் வினோத், அஜித் ஆகியோர் துணிவு படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்தனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவான இப்படத்தில், அஜித் கேங்ஸ்டராக நடித்திருந்தார். மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன், அமீர், பாவ்னி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் உலகஅளவில் ரூ250 கோடியைத் தாண்டி வசூலித்து உள்ளதாக வெளியாகியுள்ளது.

குறும்படத்தின் காப்பியா

குறும்படத்தின் காப்பியா

இந்நிலையில், வலிமை திரைப்படக் காட்சிகள் திருடப்பட்டதாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ராஜேஷ் ராஜா என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தங்க சங்கிலி என்ற குறும்படத்தை வெளியிட்ட தாகவும், அந்த குறும்படத்தில் வந்த 10 காட்சிகள் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து எச் வினோத்திடம் விளக்கம் கேட்க பல முறை முயற்சித்தேன். ஆனால் என்னால் அவரை சந்தித்து பேச முடியவில்லை என்று கூறியுள்ளார்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

கமிஷனர் அலுவலகத்தில் புகார்

இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜேஷ் ராஜா புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எச் வினோத் குறும்படத்தை காப்பி அடித்துவிட்டார் என ராஜேஷ் ராஜா புகார் அளித்திருப்பது அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. வலிமை படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று ரூ.200 கோடிக்கு மேல் வசூலானது குறிப்பிடத்தக்கது.

அஜித் 62

அஜித் 62

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கான கதையை விக்னேஷ் சிவன் முழுமையாக தயார் செய்யாத காரணத்தால் அஜித் 62 படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X