பிரபல ஹாலிவுட் நடிகரை கலாய்த்த மம்முட்டி ரசிகர்கள்: யார் யூத்துன்னு அடிச்சுக் காட்டிய சேட்டன்மார்கள்
திருவனந்தபுரம்: சமூக வலைத்தளங்களில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு.
அப்படி தற்போது பிரபல ஹாலிவுட் நடிகரின் ரசிகர்களும், மலையாள முன்னணி நடிகரின் ரசிகர்களும் ரகளையாக மோதிக் கொண்டனர்.
யார் இளமையாக இருக்கின்றார் என தொடங்கிய இந்த சமூக வலைத்தள மோதல் ஜாலியாக வைரலாகி வருகிறது.

ஹாலிவுட்டின் ஆக்சன் ஹீரோ
ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் டாம் குரூஸ். அதிரடி ஆக்சன் நிறைந்த சாகசத் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற இவருக்கு, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மிரட்டலான ஆக்சன் காட்சிகளில், ரிஸ்க் எடுத்து மிகத் துணிச்சலாக நடிப்பார் டாம் குரூஸ். இவர் நடித்த படங்கள் எல்லாம் வசூலில் சக்கைப்போடு போட்டுள்ளன.

என்றும் இளமை
ரெயின் மேன், எட்ஜ் ஆஃப் டுமாரோ, ரிஸ்கி பிசினஸ், மாக்னோலியா, வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், தி லாஸ்ட் சாமுராய் என பல ஹிட் படங்களில் நடித்துள்ள டாம் குரூஸ், சமீபத்தி' 'டாப் கன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் உலகளவில் பல மில்லியன் வசூல் செய்து, புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 60 வயதான டாம் குரூஸ் இப்பவும் பார்க்க இளமையாக இருக்கிறார்.

60 வயதில் டாம் குரூஸ்
இந்நிலையில், சமீபத்தில் டாம் குரூஸின் போட்டோக்கள் திடீரென இணையத்தில் வைரலாகின. கறுப்பு நிறத்தில் பேண்ட், சர்ட் அணிந்து செம்ம ஸ்டைலாக கெத்தாக இருக்கும் டாம் குரூஸ்ஸின் அந்த போட்டோக்களை, அவரது ரசிகர்கள் வைரலாக்கினர். அதுவும் 60 வயதான டாம் குரூஸ் இன்னும் எப்படி இளமையாக இருக்கிறார் பாருங்கள் என்ற கேப்ஷன்களை போட்டிருந்தனர்.

மோதிக்கொண்ட ரசிகர்கள்
இதைப் பார்த்த மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் ரசிகர்கள், டாம் குரூஸ் ரசிகர்களை தெறித்து ஓடவிட்டனர். அதாவது, மம்முட்டியின் ஸ்டைலான செம்ம மாஸ்ஸான போட்டோக்களை ஷேர் செய்திருந்த அவர்கள், 'Just 71 Years Mammootty' என கேப்ஷன் போட்டிருந்தனர். 60 வயது டாம் குரூஸ்ஸைவிட, 71 வயது மம்முட்டி இன்னும் இளமையாக இருப்பதாக, அவர்கள் ட்ரோல் செய்தனர். இதுவரை 421 படங்களில் நடித்துவிட்ட மம்முட்டி, இன்னும் மலையாள சினிமாவின் மெகா ஸ்டாராக ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











