Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமலாவிற்காக பாடகராக மாறிய கார்த்தி: ராப் ஸ்டைலில் செம்மையாக பாடி காட்டும் வீடியோ ரிலீஸ்
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பாடகராகவும் மாஸ் காட்டி வருகிறார்.
Recommended Video
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம், சூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத்தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் ரிலிஸுக்கு ரெடியாக உள்ளன.
விஜய்யுடன் 3 வது முறையாக கைகோர்க்கும் ஜானி மாஸ்டர்...எந்த படத்தில் தெரியுமா ?
ஹேப்பி மூடில் கார்த்தி
கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடத்துள்ளது. முத்தையா இயக்கியிருந்த இப்படத்தில் கார்த்தியுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிராமத்துப் பின்னணியில் கமர்சியலாக வெளியான விருமன், வசூலிலும் சம்பவம் செய்திருந்தது. இதனால் படு உற்சாகத்தில் உள்ள கார்த்தி, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.
பாடகராக மாறிய கார்த்தி
மதுரையில் நடைபெற்ற விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், யுவன் சங்கர் ராஜா பங்கேற்றிருந்தார். அப்போது சூர்யா, கார்த்தி இருவரையும் முதன்முதலாக பாட வைத்தது நான்தான் என மேடையில் வைத்து கூறிய யுவன், இருவரும் எப்படி பாடினார்கள் என கலாய்க்க வந்தார். ஆனால், அதற்குள் சூர்யா அவரை செல்லமாக மிரட்ட, அப்படியே சிரித்துவிட்டு சென்றுவிட்டார். யுவன் சொன்னபடி பிரியாணி படத்தில் இடம்பெற்ற 'மிஸ்ஸிசிப்பி' என்ற பாடலை கார்த்தி பாடியிருந்தார்.
மீண்டும் பாடகர் அவதாரம்
இந்நிலையில், கார்த்தி தற்போது மீண்டும் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். அமலா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் 'கணம்' படத்திற்காக, கார்த்தி ஒரு பாடல் பாடியுள்ளார். அமலாவின் கணவர் நாகர்ஜுனா உடன் கார்த்தி 'தோழா' படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள 'கணம்' படத்தை, ஸ்ரீ கார்த்தி இயக்கியுள்ளார். செப்டம்பர் 9ம் தேதி வெளியாகும் கணம் படத்தில் ரிது வர்மா, சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராப் ஸ்டைலில் செம்ம மாஸ்
'கணம்' படத்திற்காக ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள 'மாறிப்போச்சோ' என்ற பாடலை கார்த்தி பாடியுள்ளார். காலத்தின் முன்னால் எதெல்லாம் மாறிவிட்டது என்பதை விவரிக்கும் விதமாக, மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, கார்த்தி ராப் ஸ்டைலில் பாடி அதகளம் செய்துள்ளார். செம்ம ஸ்டைலாக கார்த்தி பாடியுள்ள வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்தி மீண்டும் பாடகராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாடலை கார்த்தி ரசிகர்கள் டிரெண்டு செய்து வருகின்றனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!