நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கு.. காதலன் விடுதலை..10 ஆண்டு வழக்கு இன்று முடிவுக்கு வந்தது!

மும்பை : பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கில் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் காதலனை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.

கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான் கடந்த 2013ம் ஆண்டு மும்பையில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையில் உள்ள அவரது ஜூஹூ வீட்டில் இருந்து அவர் எழுதியதாகக் கூறப்படும் ஆறு பக்க கடிதத்தின் அடிப்படையில் அவரது காதலன் பஞ்சோலியை போலீஸார் கைது செய்தனர்.

A special CBI court in Mumbai has acquitted actor Sooraj Pancholi from the jiah khan suicide case

காதலன் தான் காரணம் : ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரித்த நிலையில், மறு மாதமே சூரஜ் பஞ்சோலி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த வழக்கில் ஜியா கானின் தாயார் ரபியா கான் முக்கிய சாட்சியாக உள்ளார். தன் மகள் கொலை செய்யப்பட்டதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

சிபிஐக்கு மாற்றம் : இதையடுத்து, ஜியாவின் தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மகாராஷ்டிரா காவல்துறையிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

யார் இந்த ஜியா கான : அமெரிக்க குடியுரிமை பெற்றவரான ஜியா கான் 1998ம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை நியூயார்க்கில் முடிந்த ஜியா கான், மேல்படிப்பை லண்டனில் படித்தார். நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் லண்டன் வந்த ஜியா கான் 2007ம் ஆண்டு ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவான நிஷாபத் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து, அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதே போல, அவர் அமீர் கான் நடித்த கஜினி மற்றும் 2010 இன் நகைச்சுவைத் திரைப்படமான ஹவுஸ்ஃபுல் ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.

A special CBI court in Mumbai has acquitted actor Sooraj Pancholi from the jiah khan suicide case

சூரஜ் பஞ்சோலி யார் : ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஜரினா வஹாப் ஆகியோரின் மகனான சூரஜ் பஞ்சோலி 2015ம் அண்ட ஹீரோ என்ற காதல் ஆக்‌ஷன் படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இவர், குஜாரிஷ், ஏக் தா டைகர் போன்ற படங்களில் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.

முடிவுக்கு வந்தது : கடந்த 10 வருடமாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், இறுதி கட்ட விசாரணை அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து, நடிகர் சூரத் பாஞ்சாலி குற்றமற்றவர் என சிபிஐ நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் இந்த வழக்கில் இருந்து சூரஜ் பாஞ்சோலி சிபிஐ நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. 10 ஆண்டுகளாக பாலிவுட்டை மிரட்டி வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X