சிம்பு ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்த மஹா டீம்.. வைரலாகும் ஸ்பெஷல் போஸ்டர்!
Recommended Video
சென்னை: நேற்று சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு இவர் நடித்து வரும் மஹா திரைப்படத்தின் படக்குழு ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
பல வருடங்கள் கழித்து சிம்பு நடித்து வரும் திரைப்படம் மஹா. இதில் இவருடன் ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார் .முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது இத்திரைப்படம்.

இதற்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து வாலு திரைப்படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜமீல் இயக்கி வருகிறார். இப்படத்தில் மஹத் ராகவேந்திரா உடன் நடிக்கிறார்.
கடந்த சில தினங்களாக சிம்பு ஷூட்டிங்கில் நடித்து வரும் புகைபடங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆனது. இவருடன் மஹத் மற்றும் சேரன் போன்றவர்கள் இருக்கும் புகைப்படங்களும் வெளியானது. இப்படத்தில் சிம்பு விமானம் ஓட்டும் பைலட்டாக வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
மஹா படத்தில் சிம்பு சுமார் 45 நிமிடங்களுக்கு திரையில் வருவார் என்றும் கோவாவில் நடந்த ஒரு உண்மை கதையை படமாக எடுத்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. மற்றும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார் என்றும் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் படத்தையே தூக்கி நிறுத்தும் என்று கூறுகின்றனர்.
நேற்று சிம்புவின் பிறந்த நாளை ஒட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இவரின் அடுத்த படமான மாநாடு படத்தின் அப்டேட்டும் வந்தது. இந்நிலையில் தற்போது மஹா படக்குழுவினர் சிம்புவிற்கு பிரத்யேகமாக ஒரு போஸ்டர் வெளியிட்டு உள்ளனர்.
பலரும் இவருக்கு வாழ்த்து கூறிவரும் நிலையில் இது போன்ற ஒரு போஸ்டர் வந்து டிரென்டு ஆனது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல வருடங்களாக படங்கள் இல்லாமல் இருந்த சிம்பு தற்போது மஹா படம் மூலம் திரும்ப வருகிறார். இதற்கு பின் மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சிம்புவிற்கு இந்த வருடம் மகிழ்ச்சியான வருடம் தான் மற்றும் அவரது ரசிகர்கள் பல நாள் கனவு தற்போது நடக்கப்போகிறது மஹா மற்றும் மாநாடு ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகி அவர்களை சந்தோஷப்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications











