லால் சலாம்' வெற்றியடைய தொழுகை.. படம் மூலம் ஒன்றிணைந்த மும்மதம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதை வேலூரில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் மேளதாளத்துடன் ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும், லால் சலாம் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுசை வைத்து த்ரீ என்ற படத்தை இயக்கினார். அழகான காதலை சொன்ன இந்த திரைப்படமும், பாடலும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். 9 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி உள்ளார்.

மொய்தீப் பாய்: இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மேலும் அவருடன் விஷ்ணு விஷால், நிரோஷா, விக்ராந்த், ஜீவிதா, செந்தில், தங்கதுரை என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லைகா நிறுவனம் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். லால் சலாம் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
படம் எப்படி இருக்கு: தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்தும் நடித்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை லால் சலாம் படம் பூர்த்தி செய்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் இணையத்தின் வாயிலாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். படம் முதல் பாதி முழுவதும் எமோஷனல் காட்சிகள் நிறைந்ததாக இருக்கு, ஆனால், ரஜினி ரசிகர்களுக்கான மாஸ் படம் என்று சொல்ல முடியாது. இப்படம் முழுக்க முழுக்க பேமிலி ஆடியன்ஸுக்கான படம். முதல்பாதியில் ரஜினிகாந்த் வெறும் 15 நிமிடம் மட்டுமே வருவதாக ரசிகர்கள் படம் குறித்து விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.

சிறப்பு தொழுகை: லால் சலாம் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், வேலூரில் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் மேளதாளத்துடன் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர். மேலும், லால் சலாம் படம் வெற்றி பெற வேண்டு என்பதற்காக வேலூரில் சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது. அப்போது, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும்மதத்தை சேர்ந்தவர்களும் தொப்பியை மாற்றிக்கொண்டு தொழுகை செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதே போல இடங்களில் லால் சலாம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











