டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை ஏன் பார்க்க வேண்டும்?.. ஓ இதுதான் விஷயமா.. முதல் படத்திலேயே செம டச்

சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை பார்த்த பிரபலங்கள், பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறியிருப்பது வியப்பை அளித்திருக்கிறது. இதனையும் தாண்டி ரசிகர்கள் ஏன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எத்தணிப்பு தான் மிகப்பெரிய விளம்பர யுக்தியாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சிறிய பார்வை.

குட்நைட், லவ்வர் படங்களை தயாரித்த தயாரிப்பாளரே டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் மே 1ஆம் தேதி ரெட்ரோ படத்துடன் மோத தயராகியுள்ளது,. கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் கவனத்தை பெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. குறிப்பாக குட்நைட், குடும்பஸ்தன், லப்பர் பந்து படங்களை போன்றே டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் கவனத்தை பெற வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், இப்படத்திற்கு பிளஸ் ஆக இருப்பது நடிகர்களின் தேர்வு தான். சிம்ரன், சசிகுமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

a-special-review-of-the-film-tourist-family-directed-by-debutant-director-abhishan-jeevinth

பெரிய படங்களுக்கு ,தரும் புரோமோஷன் போன்றே இப்படத்திற்கும் பெரிய அளவில் நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் நேற்று நடந்த நிகழ்வில் பேசியிருந்தனர். இதில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது நீண்ட நாள் தோழியை காதலிப்பதாக ப்ரோபோஸ் செய்து அனைவரது மனதையும் கொள்ளையடித்து விட்டார். இவ்வளவு சாதுவான மனிதராக இருக்கும் இயக்குநரின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதை ஈர்க்கும் என்ற அளவிற்கு நம்பிக்கையை விதைத்து விட்டார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரும் நல்ல வரவேற்பை பெறறது. இருப்பினும் இப்படம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்பதை காட்டிலும் ஏன் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டியுள்ளது. இதற்கு காரணம் படத்தின் டிரைலர் முக்கிய பங்கு வகிக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி டிரைலர்: இலங்கை தமிழர்களின் குடும்பத்தை பற்றிய கதைதான் என்றாலும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் எவ்வாறான பிரச்னைகளை இவர்கள் சந்திக்கிறார்கள் என்பது தான் மையக்கதையாக இருக்கிறது. இலங்கையில் இருந்து தப்பித்து சென்னை வரும் ஒரு குடும்பம். அவர்களுக்கு யோகி பாபு உதவி செய்கிறார். இலங்கை தமிழர்கள் என்பதை மறைத்து வாடகை வீட்டில் குடியேறி வசித்து வருகிறார்கள். இப்படியான சூழலில் வேலைக்கு செல்லும் இடத்தில் சசிகுமார் சந்திக்கும் பிரச்னை மறுபக்கம் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைப்பது என விறுவிறுப்பை தருகிறது. சிம்ரனும், சசிகுமாரும் சோர்ந்து அழுகும் காட்சிகள் எதார்த்த வாழ்வியலை காட்டுகிறது. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய பிரச்னையை இலகுவாக கையாண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப காமெடி கலந்த கருத்தை திணிக்காமல் விதைக்க முயற்சித்துள்ளார்.

a-special-review-of-the-film-tourist-family-directed-by-debutant-director-abhishan-jeevinth

இலங்கை தமிழர்கள்: தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா முதல், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சீமான், காக்கா முட்டை மணிகண்டன் போன்றவர்கள் இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியுள்ளனர். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை முழு நீள காட்சிகளாக ஆவணப்படுத்தாவிட்டாலும் அவர்களது நியாயங்களை பேசியிருக்கிறார்கள். அதற்காக பாராட்டை தெரிவிக்கலாம். ஜீவா நடித்த ராமேஸ்வரம் படத்திலும் இலங்கை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கும். ஆனால், பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஜகமே தந்திரம் படத்தில் லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் குறித்து படம்பிடித்து மனதின் வலிகளை காட்சிகளாக வெளிப்படுத்தியிருந்தார். அப்படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களிடம் இருந்து டூரிஸ்ட் ஃபேமிலி படம் வேறுபடுகிறது.

ஏன் பார்க்க வேண்டும்?: குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சென்னை போன்ற பெரும் நகரத்தில் ஒரு வீட்டிற்கு வாடகை செல்வது பாகிஸ்தான் போருக்கு செல்வது போன்ற உணர்வைத்தான் தருகிறது. அதிலும் வெரைட்டியான கேள்விகளால் வீட்டு ஓனர்கள் கலங்கடிப்பார்கள். தமிழகம் முன்னேறிவிட்டதாக போஸ்டர்களில் பார்க்கிறோம். உண்மையில் கள எதார்த்தம் வேறு என்பதை டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் படம்பிடித்து காட்ட இருக்கிறது. மேலே குறிப்பிட்டது போல் இப்படம் முழுக்க முழுக்க இலங்கை தமிழர்களின் வாழ்வியலை குறித்த படமாக இருக்கிறது. குறிப்பாக அவர்களது கொண்டாட்டத்தையும் வாழ்க்கையையும் பற்றி பேசும் படமாக இது இருக்கும். குறிப்பாக சசிகுமாரும், சிம்ரனும் இப்படத்தின் மூலம் மக்களின் மனதில் புது கேள்வியை விதைப்பார்கள். தமிழ் சினிமாவில் இதுபோன்ற படங்களின் வரவின் தொடக்கப்புள்ளியாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உள்ளது என்றே கூறலாம்.

சசிகுமார் உருக்கம்: இயக்குநரும் நடிகருமான சசிகுமார் ஈசன் படத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் தமிழ் ரசிகர்களின் மனதை கரைய வைத்தது. மனிதத்தை கற்பித்த படமாகவும் இருந்து வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படத்திற்கு பிறகு நடந்த அனுபவத்தை சசிகுமார் நேற்று பகிர்ந்திருந்தார். இதில், "தற்போது விமான நிலையங்களில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அரசு மானியம் வழங்குகிறது. அயோத்தி படத்தில் நடந்தது போன்று 100 பேருக்கு உதவி கிடைத்திருக்கிறது. எனவே டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியான பிறகு தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்காக சில மாற்றத்தை கொண்டு வரும்" என சசிகுமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

a-special-review-of-the-film-tourist-family-directed-by-debutant-director-abhishan-jeevinth

பிச்சைக்காரன்: நேற்று நடந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் ஆண்டனி, "டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நான் நடித்த பிச்சைக்காரன் போன்ற அனுபவத்தை தரும். ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் காமெடி, காதல், அழுகை அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. நல்லது சொன்னால் பூமர் என்கிறார்கள். ஆனால், நிச்சயம் இப்படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் என அவர் தெரிவித்தார்.

பாராட்டு: இப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில், லைகா நிறுவனத்தின் தலைவரான தமிழ் குமரன் தனது சமூகவலைதளத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டியுள்ளார். அதில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்தேன். என் மனதை உருக்கிய படமாக இருந்தது. இப்படத்தில், நடித்திருக்கும் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு ஆகியோர் புதுமையான முறையில் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். குறிப்பாக முள்ளி தாஸ் (கமலேஷ்) என்கிற கதாபாத்திரம் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. தனது முதல் திரைப்படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கிய இயக்குநர் அபிஷன், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், இந்த அருமையான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என தமிழ் குமரன் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X