விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்காக... உருவாகிறது ஸ்பெஷல் பீரியட் செட்!
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்காக ஸ்பெஷல் பீரியட் செட் அமைக்கப்படுகிறது.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் படம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், இந்தப் படத்தை இயக்குகிறார்.
Recommended Video
இவர், இயக்குநர் ஜனநாதனிடம் பேராண்மை, புறம்போக்கு படங்களில் பணிபுரிந்தவர். படத்தைச் சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, இசக்கி துரை தயாரிக்கிறார்.

மேகா ஆகாஷ்
சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை தயாரிப்பு செய்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனியும் நடிக்கின்றனர். மற்றும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, கனிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி, கும்பகோணம், சென்னை உட்பட பல பகுதிகளில் நடந்தது.

பழமையான சர்ச்
காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதையை கொண்ட இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் பிரச்னையை பேசுவதாக படத்தின் இயக்குனர் ஏற்கனவே கூறியிருந்தார். இதன் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பகோணத்தில் நடந்தது. அங்குள்ள பழமையான சர்ச்சில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டன.

மகிழ் திருமேனி
இதையடுத்து இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. அங்கு பல்வேறு பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. விஜய் சேதுபதி, மகிழ் திருமேனி உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. விஜய் சேதுபதிக்கான காட்சிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. மற்ற நடிகர், நடிகைகளுக்கான காட்சிகளும் முடிவடைந்துவிட்டன.

பிளாஷ்பேக்
பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிக்காக, சென்னையில் சிறப்பு செட் அமைக்கப்படுகிறது. இரண்டாயிரமாவது ஆண்டில் நடப்பது போன்ற காட்சிக்காக இந்த செட் அமைக்கப்படுகிறது. 'இது படத்துக்கு முக்கியமான காட்சி. இதன் ஷூட்டிங் முடிந்ததும் படம் முடிந்துவிடும்' என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











