For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மக்களோடு மக்களாக கலந்துவிட்ட கைப்புள்ள… தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு வாகை சூடிய வைகைப்புயல்

  |

  சென்னை: நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

  வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி. 2, மாமன்னன் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

  அஜித் சூட்டிங் ஸ்பாட்ல இல்லன்னாலும் அவரைப்பத்திதான் பேசுவாங்க.. பாராட்டித் தள்ளிய ஏகே61 நாயகி! அஜித் சூட்டிங் ஸ்பாட்ல இல்லன்னாலும் அவரைப்பத்திதான் பேசுவாங்க.. பாராட்டித் தள்ளிய ஏகே61 நாயகி!

  மக்களின் கலைஞன் வைகைப்புயல்

  மக்களின் கலைஞன் வைகைப்புயல்

  பத்தோடு பதினொன்றாக திரையில் வந்துபோனவர், இன்று மக்களின் சிரிப்பு வைத்தியனாக கொண்டாடப்படுவது காலத்தின் கட்டாயம் அல்ல. காலச் சக்கரத்தின் சுழற்சிகளுள் மக்கள் தங்களை எப்படி பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை திரையில் பாடமாக எடுத்ததால் சாத்தியமானது. வடிவேலு பாணியிலேயே சொல்ல வேண்டுமானால், "அதாவது மக்களே நடிகனாக திரையில் வந்து போகாமல், உங்களில் ஒருவரை ஜெராக்ஸ் எடுத்து நான் நடிக்கப் பழகிக் கொண்டேன்" என்று சொல்லலாம்.

  ரசிகர்கள் தான் கைப்புள்ளயும் நாய் சேகரும்

  ரசிகர்கள் தான் கைப்புள்ளயும் நாய் சேகரும்

  திரைப்படங்களில் வடிவேலு நடித்த பாத்திரங்கள் எல்லாம், கதைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல. அந்தந்த பாத்திரங்கள் எல்லாமே தனித்தனியான கதைகளை சுமந்து வந்தன. வெளிநாடு சென்றுவிட்டு உள்ளூர் திரும்புகிறவனின் அலப்பறைகளை அடித்து நொறுக்கியது 'வெற்றி கொடி கட்டு' படத்தின் சுடலை என்ற பாத்திரம். உண்மையாகவே வெளிநாடுகளில் சுடலை பாத்திரம் போல ஏராளமானோர் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்துவிட்டு, உள்ளூரில் சீன் போடுபவர்கள் தான். அவர்களுக்குள்ளே வலிகளும் இருக்கும், ஆனால் அதையெல்லாம் அக்கு அக்காக பிரித்து மேய வடிவேலுவால் மட்டும் தான் முடியும்.

  ஊருக்கு ஊரு இல்லை வீட்டுக்கு வீடு

  ஊருக்கு ஊரு இல்லை வீட்டுக்கு வீடு

  அதேபோல் வடிவேலுவின் பிரபலமான பாத்திரம் என்றால் அது கைப்புள்ள தான். இப்படியான பாத்திரங்கள் ஊருக்கு ஒன்றில்லை, வீட்டுக்கு ஒரு கைப்புள்ளையை தாரளமாக பார்க்கலாம். வடிவேலுவின் இந்தப் பாத்திரம் இடம்பெற்ற வின்னர் படம் வெளியாகும் வரை, கைப்புள்ள என்ற மனநிலை பலரின் ஆழ்மனதுக்குள் ஒளிந்துக் கொண்டிருந்தது. இவர்களையும் வடிவேலு தான் மீட்டெடுத்து வந்து சுதந்திரமாக நடமாடவிட்டார். இப்போதோ வடிவேலுவின் கைப்புள்ள கேரக்டர் எல்லோருக்கும் பங்காளியாக விட்டான்.

  கலைஞன் அல்ல கலைப் பொக்கிஷம்

  கலைஞன் அல்ல கலைப் பொக்கிஷம்

  வடிவேலுவின் பாத்திரங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நாய் சேகர், வட்டச் செயலாளர் வண்டு முருகன், அலார்ட் ஆறுமுகம், காண்ட்ராக்டர் நேசமணி, புல்லட் பாண்டி, பச்சைக்கிளி, பேக்கரி ஓனர் வீரபாகு, புலிகேசி, சினேக் பாபு, ஆதவன் பானர்ஜி என எல்லாமே மக்களில் ஒருவன் தான் என்பதை, அந்த உடல்மொயில் தெரிந்துகொள்ளலாம். தமிழர்களின் வாழ்வியலில் இளையராஜாவின் இசையை எப்படி பிரிக்க முடியாதோ, அப்படித்தா நகைச்சுவை என்றால் வடிவேலு இல்லாமல் இந்த மண்ணில்லை என்றாகிவிட்டது. இதுவே வடிவேலுவின் வெற்றியின் ரகசியம் என சொன்னால், அதுவும் மிகையாகாது.

  English summary
  Comedian Vadivelu celebrates his 62nd birthday today. Vadivelu used to act in small roles and now emerging as an indispensable personality in the Tamil film industry. Now let's see the secret of his success
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X