விஜய் டிவி ரம்யா திருமண வரவேற்புக்கு திரண்டு வந்த கோலிவுட் பிரபலங்கள்

By Siva

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரம்யாவின் திருமண வரவேற்புக்கு திரை உலகைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரம்யா சென்னையச் சேர்ந்த அபராஜித் என்பவரை கடந்த 21ம் தேதி மணந்தார். அவர்களின் திருமணம் சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

இதையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரை உலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிம்பு

சிம்பு

கௌதம் மேனன், பாண்டிராஜ் படங்களில் நடித்து வரும் சிம்பு ரம்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவறாமல் வந்து கலந்து கொண்டார்.

சூர்யா

சூர்யா

ரம்யா, அபராஜித் திருமண வரவேற்புக்கு சூர்யா, ஜோதிகா தம்பதி சகிதமாக வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

குஷ்பு

குஷ்பு

நடிகை குஷ்பு தனது கணவரும், இயக்குனருமான சுந்தர் சி.யுடன் வந்து ரம்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அமலா

அமலா

அமலா பால் தனது தோழி ரம்யாவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பாரதிராஜா

பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா ஜீன்ஸ், டி சர்ட்டில் திருமண வரவேற்புக்கு இளமை ததும்ப வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

ரம்யா

ரம்யா

நடிகை ரம்யா கிருஷ்ணன் வெள்ளை புடவையில் சிம்பிளாக வந்து மணமக்கள் ரம்யா, அபராஜித்தை வாழ்த்தினார்.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

ரம்யாவின் திருமண வரவேற்புக்கு வந்த இளம் ஹீரோக்கள் நானி, ஜெய், ஆர்யா, சிம்பு, பரத் ஆகியோர் ஒன்றாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

பரத்

பரத்

அண்மையில் திருமணம் முடிந்த புதுமாப்பிள்ளை பரத் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆர்யா

ஆர்யா

நடிகர் ஆர்யா ரம்யாவுக்கும், அவரது கணவருக்கும் பூங்கொத்துகள் கொடுத்து மண வாழ்க்கை பூத்துக்குலுங்க வாழ்த்தினார்.

காமெடி நடிகர்கள்

காமெடி நடிகர்கள்

காமெடி நடிகர்கள் சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் நடிகை விதியுலேகா ராமன் ஆகியோர் திருமண வரவேற்புக்கு வந்தபோது எடுத்த புகைப்படம்.

நாசர்

நாசர்

நாசர் தனது மனைவியுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். அவரது மகன் பாஷா என்ற பெயரில் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரி

சூரி

பரோட்டா சூரி கட்டம் போட்ட சட்டையில் ஏனோ திருவிழாவில் தொலைந்தது போன்று போஸ் கொடுத்திருக்கிறார். சிரிங்க சூரி.

ரவிக்குமார்

ரவிக்குமார்

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் திருமண வரேவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

சுஹாசினி

சுஹாசினி

நடிகை சுஹாசினி மணமக்களை வாழ்த்தினார். அவர்களின் திருமணத்திற்கு அவர் தனது கணவர் மணிரத்னத்துடன் வந்திருந்தார்.

ப்ரீத்தா

ப்ரீத்தா

முன்னாள் நடிகையும், இயக்குனர் ஹரியின் மனைவியுமான ப்ரீத்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பளிச் புன்னகையுடன்.

லிங்குசாமி

லிங்குசாமி

இயக்குனர் லிங்குசாமி அஞ்சான் படப்பிடிப்பில் பிசியாக இருந்த போதிலும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்த மறக்காமல் வந்திருந்தார்.

சிவா

சிவா

நடிகர் சிவா தனது மனைவி ப்ரியாவுடன் வந்து ரம்யாவையும் அவரது கணவரையும் வாழ்த்தினார்.

பிரசாந்த்

பிரசாந்த்

நடிகர் பிரசாந்த் ரம்யாவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். ரம்யாவின் திருமண வரவேற்புக்கு வந்திருந்தோரை பார்க்கையில் அவருக்கு கோலிவுட்டில் இருக்கும் மதிப்பு தெரிகிறது.

தயாநிதி

தயாநிதி

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது உறவினரும், ஹீரோவுமான அருள்நிதியுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

சினேகா

சினேகா

புன்னகை செல்வி சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் வந்து ரம்யாவை வாழ்த்தினார்.

ரவி

ரவி

ஜெயம் ரவி மணமக்களை வாழ்த்தினார். ஜெயம் ரவி தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜய்

விஜய்

இயக்குனர் விஜய் மணமக்களை வாழ்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X