தோழியோட அப்பாவா இருந்தா இப்படியும் சிக்கல் வரும்!

By Sudha

தமிழ் சினிமாக்காரர்களுக்கு எப்படித்தான் இந்த கதைக் கரு தோன்றுமோ தெரியவில்லை. ஒன்று படு வித்தியாசமாக யோசிக்கிறார்கள், இல்லை, வில்லங்கமாக யோசிக்கிறார்கள். இதில் 2வது ரகத்தில் சேர்த்தி இந்த உனக்கு 20 எனக்கு 40 படம்.

வழக்கம் போல செக்ஸையும், முரண்பட்ட காதலையும் அடிப்படையாகக் கொண்ட படம்தான் இது. வயது வித்தியாசம் நிறைய கொண்ட இருவருக்கு இடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதையாம்.

பன்னாரி அம்மன் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அக்ஷய் நாயகனாக நடிக்கிறார். அவரே படத்தின் இயக்குநரும் கூட.

2 ஹீரோயின்

2 ஹீரோயின்

அகஷய்க்கு இப்படத்தில் 2 நாயகிகள். ஒருவர் அம்ருதா. இன்னொருவர் ஷாலினி.

2 தோழிகள்

2 தோழிகள்

ஷாலினியம்,அம்ருதாவும் நல்ல தோழிகள். ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். எப்போதும் இணை பிரியாமல் இருப்பவர்கள்.

ஷாலினி அப்பா மீது அம்ருதாவுக்குக் காதல்

ஷாலினி அப்பா மீது அம்ருதாவுக்குக் காதல்

ஒரு கட்டத்தில் ஷாலினியின் தந்தை மீது அம்ருதாவுக்கு காதல் பிறக்கிறது. வயது வித்தியாசம்,தோழியின் தந்தையாயிற்றே போன்றவை அவரது கண்களை மறைக்க காதலில் மூழ்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீ்தக் கதையாகும்.

2வது ஹீரோவும் உண்டு

2வது ஹீரோவும் உண்டு

படத்தில் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார். அவரது பெயர் சிவா. இவருக்கும் படத்தில் முக்கியப் பாத்திரமாம்.

காமெடிக் குவியலும்

காமெடிக் குவியலும்

படத்தில் காதல் மட்டுமல்ல காமெடியும் இருக்கிறது. போண்டா மணி, வையாபுரி, சிங்கம்புலி ஆகியோரைப் பிடித்து காமெடிக்காக சேர்த்துள்ளனர்.

5 பாட்டு

5 பாட்டு

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஜாய் மேக்ஸ்வெல் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் பல ஆல்பங்களுக்கு மி்யூசிக் போட்டவராம்.

படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதால், உயிர் உள்ளிட்ட சர்ச்சைப் படங்களின் வரிசையில் இதுவும் சேருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X