கொஞ்சம் அடக்கி வாசி.. எல்லாம் சரியாகும்.. சனம் ஷெட்டிக்கு சைபர் புல்லிங்.. வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்ஸ்
சென்னை: தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என சனம் ஷெட்டிக்கு ஸ்ட்ரேஞ்சர் ஒருவர் மிரட்டல் விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை சனம் ஷெட்டி பிரபல மாடலாகவும் நடிகையாகவும் இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனின் முன்னாள் காதலி ஆவார்.

வனிதாவுக்கு அட்வைஸ்
சனம் ஷெட்டி, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் என இருப்பவரை திருமணம் செய்வது தவறு என அட்வைஸ் செய்திருந்தார். தொடர்ந்து சமூக பிரச்சனைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்.

ஸ்க்ரீன் ஷாட்ஸ்
இந்நிலையில் சனம் ஷெட்டியை சமூக வலைதளங்களில் சிலர் மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தர்ஷன் பேரை கெடுத்த
அவர் வெளியிட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டில் உன் வேலைய பாரு.. எல்லா பிரச்சனையிலும் தலையிட்டு உன் இமேஜ கெடுத்துக்காத. தர்ஷன் பெயரை கெடுக்க நினைச்ச கெடுத்துட்ட, மத்தவங்களையாவது நிம்மதியா விடு என பதிவிடப்பட்டுள்ளது.

கொஞ்சம் அடக்கி வாசி
மற்றொரு செய்தியில் எல்லாமே நீ பப்ளிசிட்டிக்காக செய்கிறாய். அதுதான் மற்றவர்களுக்கு உன்னை பிடிக்காததற்கு காரணம். கொஞ்சம் அடக்கி வாசி எல்லாம் சரியாகும்.. என பதிவிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த நடிகை சனம் ஷெட்டி உன்னுடைய பெயர் சைபர் புல்லிங் போலீஸ் கம்ப்ளையன்ட்டுக்கு செல்ல போகிறது. இப்படியே செய் என்றும், நாளை நான் போஸ்ட் செய்யப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இமேஜை பற்றி அக்கறை
இந்நிலையில் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சனம் ஷெட்டி, இன்று நான் மற்ற பெண்களை ஆதரிக்கும் பெண்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன், இந்த அற்புதமான செய்தி இறங்குகிறது! எனவே என்னைப் பற்றி எதுவும் தெரியாத இந்த பெண்மணி ஜில்லுக்ஃபெர்னாண்டோ எனது இமேஜைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுகிறார், மேலும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதை நிறுத்தும்படி எனக்கு உத்தரவிடுகிறார்!

இதுவும் ஒன்று..
அவர் எப்படியாவது என்னைப் பற்றி குற்றம் சாட்டுவதால், இதை விளம்பரப்படுத்தி அவரை பிரபலமாக்குவேன் என்று நான் நினைத்தேன் (வாக்குறுதியளித்தபடி)! பிரைவேட் மெஸேஜ் பக்கத்தில் தினசரி அடிப்படையில் நான் பெறும் பல மெஸேஜ்களில் இதுவும் ஒன்றாகும். அவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.

ஒன்றாக குரல் கொடுப்போம்
பல லட்சம் மக்களின் நல்வாழ்வைப் பற்றிய எந்தவொரு முக்கியமான சமூகப் பிரச்சினைகளையும் தீர்க்க பலர் ஏன் பயப்படுகிறார்கள் என்பதை இப்போது நாம் அறிவோம்! நாம் அனைவரும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும், குரல் கொடுக்கும் மக்களை கொடுமைப்படுத்தாமல் பொதுமக்களுக்கு ஏதேனும் அநீதி ஏற்படுவதாக நாம் அனைவரும் குரல் கொடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











